வெயிலில் வாடும் மக்காச்சோள பயிரை காப்பாற்ற வழி

வெயிலில் வாடும் மக்காச்சோள பயிரை காப்பாற்ற, நுண்ணுயிர்க்காரணி தெளிக்க வேண்டுமென வேளாண்மைத்துறை இணை இயக்குநர் அழகிரிசாமி தெரிவித்துள்ளார்.  இதுதொடர் பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது :

  • பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வட்டாரங்களில் மக்காச்சோளம் தற்போது 30 முதல் 35 நாட்கள் பயிர்களாக உள்ளது. இந்நிலையில் கடந்த 10, 12 நாட்களுக்கும் மேலாக மழை ஏதும் இல்லாததால் மக்காச்சோளம் பயிர்கள், குறிப்பாக சரளை மண் நிலப்பகுதியில் விதைப்பு செய்யப்பட்ட மக்காச்சோளப் பயிர்கள் வாடும் தருவாயில் உள்ளது.
  • மண்ணில் ஈரப்பதம் குறைந்து கடுமையான வெப்பம் நிலவுவதால் வாடும் தருவாயில் உள்ள பயிர்களுக்கு 200 மி.லி பிபிஎப்எம் நுண்உயிர்க்காரணியை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு இலைகள் நன்றாக நனையும்படி காலை வேளையில் தெளிக்கவேண்டும்.
  • இதனால் பயிர்கள் வாடும் நிலையிலிருந்து தெளிந்து விடும்.
  • இந்த பிபிஎப்எம் நுண்உயிர்க்காரணி வேப்பந்தட்டை பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் விநியோகத்திற்கு உள்ளது. இதனை விவசாயிகள் வாங்கித் தெளித்து பயனடையலாம்.

நன்றி: தினகரன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Related Post

3 thoughts on “வெயிலில் வாடும் மக்காச்சோள பயிரை காப்பாற்ற வழி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *