உங்கள் பயிர்களுக்கு நீர் விட, நீங்கள், தினமும் வெயிலில் மூன்று நான்கு கிலோமீட்டர் நடந்து செல்கிறீர்களா?
அப்படி நடந்து சென்றால், அங்கே, மின்சாரம் இல்லாமல் இருப்பதை பார்த்து, வெறுத்து போய் திரும்பி வந்ததுண்டா?
இப்போது, இதற்கு ஓர் விடிவு கிடைத்திருகிறது.
பூனாவில் உள்ள ஒரு கம்பெனி, மொபைல் போன் மூலமாக மோட்டார் பம்ப் போடவோ, அணைக்கவோ செய்ய முடியும் ஒரு இயந்தரத்தை கண்டு பிடித்திருகிறது.
இதன் மூலம், ஒரு விவசாயி போன் மூலம், பம்ப் இருக்கும் இடத்தில மின்சாரம் இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள முடியும். ஒரு SMS அனுப்பி, மோட்டார் போடவும், இன்னொரு SMS அனுப்பி மோட்டார் நிறுத்தவும் செய்ய முடியும். ஒவ்வொரு மோட்டார் ஒரு நம்பர் கொடுக்க படும். அந்த நம்பரை SMS மூலம் அனுப்ப வேண்டும். இந்த இயந்தரத்தை உங்களிடம் இருக்கும் மொடோரின் ஸ்டார்ட்டர் உடன் இணைக்க வேண்டும். உங்களிடம் இருக்கும் மோட்டார் அப்படியே உபயோகிக்கலாம். உங்கள் ஊரிலும், வயல் இருக்கும் இடத்திலும், மொபைல் சிக்னல் இருக்க வேண்டும்.
இந்த கம்பெனி பெயர் நநோகணேஷ். இந்த கம்பனியை இந்த விலாசத்தில் நீங்கள் காண்டக்ட் பண்ணலாம்:
305, முநிசுவ்ராத் ஆவினு, மூன்றாவது மாடி, கனரா வங்கி எதிரில், சிவாஜி ரோடு, ச்வர்கடே கார்நேர், புனே – 411002
ஆங்கிலத்தில்: 305 Munisuvrat Avenue, 3rd Floor, Opposite Canara Bank, Shivaji Road, Swargate Corner, Pune – 411 002,
போன்: +91-20-24472277 மொபைல்: 91-9822632277, +91-9822503403.
நநோகணேஷ் பற்றிய வீடியோ பார்க்க: Youtube
http://www.nanoganesh.com
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
One thought on “SMS மூலம் பயிர்களுக்கு நீர்!”