SMS மூலம் பயிர்களுக்கு மோட்டார் வேலை செய்ய உதவும் என்ற கருவியை நாம் முன்பே படித்துள்ளோம்.
இதோ, அதை போலவே இன்னொரு கருவி: இதன் பெயர் கிசான் ராஜா.
இந்த நிறுவனம் பெங்களூரில் உள்ளது. Cisco போன்ற பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்த பொறி இயல் நிபுணர்கள் இந்த கருவியை டிசைன் செய்து உள்ளார்கள்.
இதன் மூலம், ஒரு விவசாயி போன் மூலம், பம்ப் இருக்கும் இடத்தில மின்சாரம் இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள முடியும். ஒரு SMS அனுப்பி, மோட்டார் போடவும், இன்னொரு SMS அனுப்பி மோட்டார் நிறுத்தவும் செய்ய முடியும். ஒவ்வொரு மோட்டார் ஒரு நம்பர் கொடுக்க படும். அந்த நம்பரை SMS மூலம் அனுப்ப வேண்டும். இந்த இயந்தரத்தை உங்களிடம் இருக்கும் மொடோரின் ஸ்டார்ட்டர் உடன் இணைக்க வேண்டும். உங்களிடம் இருக்கும் மோட்டார் அப்படியே உபயோகிக்கலாம். உங்கள் ஊரிலும், வயல் இருக்கும் இடத்திலும், மொபைல் சிக்னல் இருக்க வேண்டும்.
இதை தவிர, நீர் இல்லாவிட்டால் தானாகவே மோட்டார் நிற்கும் தன்மை, குறிப்பிட்ட நேரங்களில் (இரவு நேரம்) இயக்குதல், வோல்டேஜ் சரியாக இல்லா விட்டால் கண்டு பிடித்தல் போன்ற தன்மைகளும் உள்ளன,
மேலும் விவரங்களுக்கு:
Vinfinet Technologies Pvt Ltd, Site #:8, 3rd Floor, G.R Complex, Next to Chemmanur Jewelleries, Varthur Main Road, Marathahalli Bridge, Bangalore – 560037, karnataka
ஈமெயில்: info@kisanraja.com
டெலிபோன்: 08041644294
அலைபேசி எண்: 09980010810 / 09886910823
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்