மைசூர் மல்லி – பாரம்பரிய நெல்

கர்நாடக மாநிலத்தில் பாரம்பரிய நெல் ரகமாக பிரசித்தி பெற்ற மைசூர் மல்லி ரகம், தமிழகத்தில் பரவலாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கர்நாடக மாநிலத்தில் இந்த ரகம் தரும் மகசூலைவிட, தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் இரண்டு மடங்கு மகசூலை தருகிறது.

மைசூர் மல்லி ரகம் மன்னர்களுக்கு உணவளிப்பதற்காகவே உற்பத்தி செய்யப்பட்ட ஒன்று. சாதம் தும்பைப் பூ போல் வெண்மையாகவும் இருக்கும்.

இந்த ரகம் நூறு ஆண்டுகளுக்கு மேலாக சேலம், தருமபுரி மாவட்டங்களில் விவசாயிகள் தொடர்ச்சியாக உற்பத்தி செய்துவருகின்றனர். இல்லத்தரசிகள் விரும்புகிற வகையில் பழுப்பு நிற அரிசி, நடுத்தர ரகம், விரைவாக வேகக்கூடியது. உணவு, அனைத்து பலகார வகைகளுக்கும் ஏற்ற ரகமும்கூட.

Courtesy: Hindu
Courtesy: Hindu

நோய் எதிர்ப்பு சக்தி

இந்த ரகம் மிகுந்த மருத்துவ குணம் கொண்டதாகவும், சத்து மிகுந்ததாகவும் கருதப்படுகிறது. சாதம் வடித்த கஞ்சி நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாக இருப்பதால், இந்த கஞ்சியை யாரும் வீணாக்குவதில்லை. இதனுடைய பழைய சாதமான நீராகாரம் சுவையும் சத்தும் மிகுந்ததாக இருக்கிறது.

குழந்தைகளுக்கு உணவளிக்க ஏற்ற ரகம். குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணம் ஆவது இந்த ரகத்தின் சிறப்பு. நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருப்பதால், குழந்தைகள் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள். குழந்தைகளுக்கு உணவளிக்கவே பெரும்பாலான நகரவாசிகள் மைசூர் மல்லி அரிசியை விரும்பி வாங்குகிறார்கள்.

மன்னர்கள் சாப்பிட்ட நெல் ரகமாக இருந்தாலும் சாதாரண குடிமகனும் இந்த ரகத்தை சாப்பிடும் வகையில் தமிழக உழவர்கள் உற்பத்தி செய்து வழங்கி வருகிறார்கள்.

ஜெயராமனைத் தொடர்புகொள்ள: 09443320954

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *