புடலங்காய் சாகுபடி

புடலங்காய் சாகுபடியில், குறைந்த செலவில் நல்ல லாபம் பெறலாம் என, ஓணம்பாக்கம் விவசாயி தெரிவித்தார்.

சித்தாமூர் – செய்யூர் சாலையில் உள்ளது ஓணம்பாக்கம். இப்பகுதி மக்கள், தற்போது,தோட்டக்கலை பயிரான காய்கறி பயிரிடுவதில், ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதில், புடலங்காய் பயிரிடுவதன் மூலம் குறைந்தளவு நீரில், மூன்று ஆண்டுகள் வரை லாபம் பெறலாம் என, அப்பகுதி விவசாயி கபாலி தெரிவித்தார்.இதுகுறித்து, அவர் கூறியதாவது:

 • எனக்கு சொந்தமாக நிலம் ஏதும் இல்லை. 6 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, பயிர் செய்து வருகிறேன்.
 • நெல் பயிரிட்டால், அதிக நீர்தேவைப்படுகிறது. அதிக செலவும் ஆகிறது.
 • மேலும், எலி மற்றும் பூச்சித் தொல்லையால்,போதுமான மக‹ல் கிடைப்பதில்லை. இதனால், எங்கள் ஊரில் அதிகமானோர் புடலங்காய் சாகுபடி செய்து, லாபம் அடைகின்றனர்.
 • தற்போது, நானும், கடந்த நான்கு ஆண்டுகளாக புடலை பயிர் செய்து வருகிறேன்.சாகுபடி முறைஇந்தாண்டு, அரை ஏக்கர் நிலத்தில், புடலங்காய் பயிர் செய்துள்ளேன்.
 • இதன் மூலம், எனக்குபோதுமான வருமானம் வருகிறது. அரை ஏக்கர் நிலத்தில் பயிர் செய்ய, ஒன்னே முக்கால் கிலோ விதைதேவைப்படும்.
 • விதையை, திண்டிவனத்தில் வாங்கி வந்தேன். விதையை நடுவதற்கு முன், நிலத்தை நன்றாக உழுது, சமன் செய்து, இயற்கை மற்றும் அடி உரம் இடவேண்டும்.
 • 5 அடி இடைவெளியில் குழி எடுத்து, விதையை நட்டு பராமரித்து வரவேண்டும்.பராமரிப்புகொடி வளரும் போது, இதற்கு பந்தல் அமைக்கவேண்டும்.
 • அரை ஏக்கருக்கு பந்தல் அமைக்க, ஒரு சென்ட் நிலத்திற்கு, ஒரு கிலோ கம்பிதேவைப்படும்.இதன் விலை, 65 ரூபாய்.
 • அரை ஏக்கருக்கு, 50 கிலோ கம்பியுடன், 15 கிலோ டொய்ன்தேவைப்படும்.இதன் விலை, ஒரு கிலோ 160 ரூபாய் ஆகும்.
 • பந்தலில், கொடி படரத் தொடங்கியவுடன் 60 நாட்களில், காய் காய்க்க தொடங்கும். தொடர்ந்து, 5 மாதங்கள் காய் பறிக்கலாம்.
 • மகசூல்ஒருநாள் விட்டு, ஒருநாள் காய்களை பறிக்கலாம். இதில், 100 முதல் 150 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.
 • ஒரு கிலோ காய், 10 முதல் 13 ரூபாய் வரை விற்பனையாகிறது.கோயம்பேட்டில் இருந்து, தினமும் வரும் லாரி மூலம் அனுப்பி விடுவோம்.தேவைப்படும் போது, பணத்தினை பெற்றுக் கொள்வோம்.
 • முதல் ஆண்டில் மட்டும், அனைத்து செலவுகளும்சேர்த்து, 30 ஆயிரம் ரூபாய் செலவாகும்.லாபம்ஆனால், 5 மாத விளைச்சலில், 75 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.
 • ஒரு முறை அமைக்கப்படும் பந்தல், மூன்று ஆண்டுகள் வரை இருக்கும்.
 • இதனால், அடுத்தடுத்த ஆண்டுகளில், விதை, உழவு, உரம் மற்றும் களை ஆகிய இனங்களுக்கு மட்டுமே செலவு செய்ய வேண்டி வரும். எனவே, இரண்டாவது, மூன்றாவது ஆண்டுகளில், நல்ல லாபம் கிடைக்கும்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *