கல்யாண பூசணியை இடைவெளி விட்டு நடவு செய்தால், நல்ல விளைச்சலை கொடுக்கிறது என்கின்றனர், காஞ்சிபுரம் மாமண்டூர்
விவசாயிகள்.
காஞ்சிபுரம் அடுத்துள்ளது, துாசி மாமண்டூர்.
- இங்கு, மேட்டுப்பகுதிகளில் உள்ள விளை நிலங்களில், விவசாயிகள் வெள்ளரி, அகத்தி கீரை, தர்பூசணி, கல்யாண பூசணி, அவரை, கத்திரி ஆகியவற்றை, சாகுபடி செய்கின்றனர்.
- கல்யாண பூசணியை, 10 அடி அகலம், 8 அடி நீளத்திற்கு இடைவெளிவிட்டு நடவு செய்தால், நல்ல விளைச்சலை கொடுப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்
- கல்யாண பூசணிக்காய், ஒவ்வொரு அமாவாசையின் போது, அதிகளவில் விற்பனையாகிறது.
- திருஷ்டி கழிக்க, பொதுமக்கள், வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.
- வெண்பாக்கம், வேளாண்மை துறை அதிகாரிகளின் ஆலோசனைபடி, இடைவெளிவிட்டு நடவு செய்யும் முறையை, கடைபிடித்து வருகிறோம்.
- இதில், ஒவ்வொரு செடியும் நன்கு படர்ந்து செல்கின்றன.
- 45வது நாளில் பூக்க துவங்குகிறது.
- அனைத்து பூக்களிலும் காய்கள் பிடிக்கிறது.
- 85 வது நாளில், காய் அறுவடைக்கு தயாராகிறது.
- குறைந்த செலவில், நிறைய லாபம் கிடைக்கிறது. ஒரு கல்யாணி பூசணி, மூன்று முதல் ஐந்து கிலோ எடை வரை உள்ளது.
இவ்வாறு, விவசாயிகள் கூறினர்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்