சாம்பல் பூசணி சாகுபடி டிப்ஸ்

பருவம்:

  • கொடிவகை காய்கறிப் பயிர்களுக்கு சிறந்த பருவம் ஆடி மற்றும் தைப்பட்டங்களே என்பது எல்லோரும் அறிந்த ஒன்றே.அப்பருவங்களே சாம்பல் பூசணி விதை உற்பத்திக்கும் ஏற்ற பருவம்.அதாவது ஜூன், ஜூலை மற்றும் ஜனவரி-பிப்ரவரி மாதங்களாகும்.
  • விதைப்புக்கு தேர்ந்தெடுக்கும் விதைகள் வல்லுனர் விதைகள் அல்லது ஆதார நிலை விதைகளாக இருப்பது மிக முக்கியம்.
  • ஒரு ஏக்கருக்கு தேவையான 400 கிராம் விதைகளை “கேப்டான்’ அல்லது “பெவிஸ்டின்’ பூஞ்சாணக்கொல்லி மருந்துகொண்டு விதைநேர்த்தி செய்து கொள்ளவும்.
  • பின் குழிகளில் குழி ஒன்றுக்கு ஐந்து விதைகள் வீதம் சம இடைவெளி விட்டு நடவேண்டும்.
  • விதை நடவு செய்தபின் பூவாளி கொண்டு தண்ணீர் ஊற்ற வேண்டும்.
  • அவ்வாறு தண்ணீர் ஊற்றும்போது மண்ணை நீர் அரிக்காமலும், விதைகள் வெளியில் தெரியாமலும் கவனமாக ஊற்ற வேண்டும்.
  • செடிகள் முளைத்து நன்கு வளர்ந்த பின் வாரம் ஒருமுறை நீர் பாய்ச்சுவது முக்கியம்.
  • செடிகள் முளைத்த 10 நாட்களில் ஒவ்வொரு குழியிலும் திடமான மூன்று செடிகளை மட்டும் விட்டு, அதிகமாக உள்ள செடிகளை அகற்றிவிட வேண்டும்.
  • அவ்வாறு செய்வதால் அளிக்கும் உரம் மற்றும் நீர் போன்றவைகளுக்கு பற்றாக்குறை இல்லாமலும் செடிகளுக்குள் போட்டிஇல்லாமலும் நன்கு வளர ஏதுவாகும்.
  • குழிகளில் களைகள் இல்லாமல் பராமரிப்பது மிக முக்கியம்.ஏனெனில் களைச்செடிகள் சாம்பல் பூசணி செடிகளுக்கு போட்டியாக இடுபொருட்களை எடுத்துக் கொள்வதால் மகசூல் குறைவதுடன் அவற்றின் தரமும் குறைகின்றன.
  • எனவே, செடிகள் படருவதற்குள் குழிகளில் இரண்டு அல்லது மூன்று முறை கைக்களை எடுத்துவிட வேண்டும்.

வளர்ச்சி ஊக்கி தெளித்தல்:

  • பொதுவாக கொடிவகைக் காய்கறிகளில் ஆண், பெண் பூக்கள் தனித்தனியாக பூக்கின்றன.
  • செடிகளில் பெண் பூக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால்தான் நல்ல மகசூல் கிடைக்கும். எனவே சாம்பல் பூசணி பயிருக்கு “எத்திரல்’ என்னும் வளர்ச்சி ஊக்கியை 200 பி.பி.எம். அளவில் செடிகளில் 4 இலைகள் தோன்றும் தருணத்தில் இருந்து ஒரு வார இடைவெளியில் நான்கு முறை தெளிக்க வேண்டும்.
  • சாம்பல் பூசணி பயிருக்கு 22 கிராம் யூரியாவை நட்ட 30வது நாளில் மேலுரமாக இடவேண்டும்.
  • அவ்வப்போது தென்படுகின்ற பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த பரிந்துரைக்கப்பட்ட பயிர் பாதுகாப்பு முறைகளைக் கடைபிடிக்க வேண்டும்.

அறுவடை:

  • பூசணி விதைத்த 90ம் நாளிலிருந்து காய்களை அறுவடை செய்யலாம்.
  • சாதாரண வெப்பநிலையில் காய்களை நல்ல காற்றோட்டமான அறைகளில் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்காமல் இடைவெளியிட்டு சேமிப்பதன் மூலம் சுமார் 4லிருந்து 5 மாதங்கள் வரை பாதுகாக்கலாம்.

தொடர்புக்கு: எம்.அகமது கபீர், 61, ஆர்.கே.ஆர்.நகர், தாராபுரம்-638 656, திருப்பூர். எம்.அகமது கபீர், 09360748542.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “சாம்பல் பூசணி சாகுபடி டிப்ஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *