நெல்லுக்கு பதிலாக திருக்கழுக்குன்றம் விவசாயிகள் மாற்று பயிராக பூசணிக்காய் வகையை அதிக அளவில் பயிரிடுகின்றனர்.
திருக்கழுக்குன்றம் சுற்றியுள்ள கிராமங்களில் ஏரிகள் மற்றும் பாலாற்று படுகையால் நீர் வளம் மிகுந்தது. இங்கு நெல், கரும்பு, தர்பூசணி போன்ற பயிர்கள் விளைச்சல் அதிகமாக உள்ளது.இங்குள்ள விவசாயிகள் கோடைக்காலங்களில் மாற்று பயிர்களை ஆர்வமாக செய்து வருகின்றனர்.கோடை கால பயிர்கோடை கால தேவைக்காக, தர்பூசணி பயிரிட்டு அறுவடை செய்த விவசாயிகள், தற்போது பூசணிக்காய் பயிரிட்டுள்ளனர்.
பூசணிக்காய் சாகுபடி செய்தால், மூன்று மாதத்தில் அறுவடை செய்யலாம்.
இதுகுறித்து, கம்பையாபுரம் விவசாயி ராஜசேகர் கூறியதாவது:
- பதப்படுத்திய பூசணி விதைகள், பல்வேறு எடை அளவுகளில் (100 கி. விதை, 250 ரூபாய்), உரக்கடைகளில் கிடைக்கின்றன.
- தேவைக்கேற்ப, ஒரு ஏக்கருக்கு, அதிகபட்சம் 600 கிராம் என்ற அளவில், விதைகளை வாங்கி, விதைக்க வேண்டும்.
- விதைக்கும் முன்பு, நிலத்தை உழுது, இயற்கை உரம் மற்றும் ரசாயன உரம் இட்டு, நீர் பாய்ச்சி, விதை ஊன்றப்படுகிறது. மூன்றே நாளில், விதை முளைத்து, செடி மற்றும் களைகள் உருவாகின்றன.
- களையை அகற்றி, மீண்டும் உழுது, நீரை தேக்கும் வகையில், பாத்தி கட்ட வேண்டும்.
- நிலம் ஈரப்பதத்திற்காக, நான்கு நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்சி, உரமிடுவது அவசியம்.
- விதைக்கப்பட்ட நாளில் இருந்து, 35வது நாளில், பூ பூக்கும் அடுத்த சில நாட்களில் பிஞ்சு காய்த்து, நாளடைவில் பெருக்கும்.
- மூன்றே மாதத்தில் அறுவடை செய்யலாம்
- ஒரு ஏக்கர் பூசணிக்காயை பயிரிட, அதிகபட்சமாக 15,000 ரூபாய் செலவாகும்.
- ஒரு ஏக்கரில், 15 டன் வரை பூசணிக்காய் அறுவடை செய்யலாம்.
- மழை பெய்யாமல் இருந்தால், கூடுதல் விளைச்சல் இருக்கும்.
- தற்போது, சமையல் பூசணி மற்றும் திருஷ்டி பூசணி என, பயிரிட்டுள்ளனர்.
- வெளி மாவட்ட மொத்த வியாபாரிகள், இங்கு நேரடியாக கொள்முதல் செய்கின்றனர்.
- முதல்முறையாக 4 ஏக்கரில், பூசணி பயிரிட்டுள்ளேன். 60 ஆயிரம் ரூபாய் வரை செலவானது. விளைச்சலை பொறுத்து, 40 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும் என, எதிர்பார்க்கிறேன் என்றார்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்