எண்டோசல்ஃபான் பூச்சிக்கொல்லி மருந்தை அடுத்த 2 ஆண்டுகளுக்கு இந்தியாவில் அனுமதிக்கலாம் என்று என்று உச்ச நீதிமன்றத்தில் நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.
எண்டோசல்ஃபானை இந்தியாவில் தடை செய்ய வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக ஆய்வு செய்ய நிபுணர் குழுவை நியமித்தது. 2011 மே மாதம் எண்டோசல்பானுக்கு தாற்காலிகத் தடையும் விதிக்கப்பட்டது.
இது தொடர்பாக ஆய்வு செய்த நிபுணர் குழு, அடுத்த 2 ஆண்டுகளுக்கு எண்டோசல்ஃபானை பயன்படுத்த அனுமதிக்கலாம்.
மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இருப்பு வைத்துள்ள இந்த பூச்சி மருந்து, அதனைத் தயாரிப்பதற்கான மூலப்பொருள்களை முற்றிலுமாக தீர்த்துக் கொள்ள இந்த கால அவகாசத்தை வழங்கலாம் என்று பரிந்துரைத்துள்ளது. இதனை உச்ச நீதிமன்றம் நவம்பர் 29ஆம் தேதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள இருக்கிறது.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்