விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் கேடு விளைவிக்கும் என்டோ சல்பான் பூச்சி மருந்து பற்றியும், கேரளா அரசு இந்த மருந்தை தடை செய்தது பற்றியும் நாம் முன்பே படித்தோம்.
இப்போது, தமிழகத்தின் விவசாயிகளும் இந்த மருந்தை தடை செய்ய கோரிக்கை விடுத்து உள்ளனர். பயிர்களுக்கு பயன்படுத்தப்படும் மிகக் கொடிய நச்சுத்தன்மை கொண்ட என்டோ சல்பான் பூச்சிகொல்லி மருந்தை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின் கொள்கை பரப்புச் செயலர் கே.எம். நந்தகோபால் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பது:
- என்டோ சல்பான் பூச்சிகொல்லி மருந்து அனைத்து பயிர்களுக்கும் தெளிக்கப்படுகிறது.
- முக்கியமாக முட்டைகோஸ், காளிபிளவர், சௌ சௌ, தக்காளி, வெண்டைக்காய், கத்திரிக்காய், திராட்டை போன்ற பயிர்களில் பூச்சிகளை அழிக்க இது பயன்படுத்தப்படுகிறது.
- என்டோ சல்பான் மருந்தின் நச்சு எச்சத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு, பல்வேறு நோய்த் தாக்குதலுக்கு ஆளாகின்றனர்.
- எனவே, இதனை தடை செய்யக் கோரி, பொதுநல அமைப்புகள் மக்களிடம் லட்சக் கணக்கில் கையெழுத்து வாங்கி மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பின.
- இதையடுத்து, மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் என்டோ சல்பானை தடை செய்யப்படும் என அறிவித்தது. ஆனால் இதுவரை இதற்கான முறையான அறிவிப்புகள் இல்லை.
- ஆனால், கேரள மாநில அரசு இம்மருந்தை தடை செய்து கடந்த நவம்பர் 20 ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது.
எனவே, தமிழக அரசும் இதை தடை செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் நந்தகோபால்.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
One thought on “என்டோசுல்பான் தடை செய்ய கோரிக்கை”