ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறை

ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகளில் ஒன்றான பட்டம் விட்டு நடவு செய்யும் முறையை அதாவது நெல் நாற்றுக்களை நடவு செய்யும்போது எட்டடிக்கு ஒரு அடி இடைவெளி விட்டு நடவு செய்யும் முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என வேளாண் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து புதுகை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ஷாஜகான், குடுமியான்மலை உழவர் பயிற்சி நிலைய வேளாண் துணை இயக்குநர் சாந்தி மற்றும் வேளாண் அலுவலர் ராஜசேகரன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

  •  பொது வாக நெற்பயிரில் பூச்சி நோய்களை வந்த பின் கட்டுப்படுத்துவதை விட வரு முன் காப்பதே சிறந்த வழியாகும்.
  • தொடக்கத்திலேயே ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறை களைப் பின்பற்றி வந்தால் நெற்பயிரில் பூச்சி நோய்த் தாக்குதலைப் பெருமளவு கட்டுப்படுத்தி கூடுதல் மகசூல் பெறுவ தோடு சாகுபடி செலவினையும் குறைக்கலாம்.
  • ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகளில் ஒன்றான பட்டம் விட்டு நடவு செய்யும் முறையை அதாவது நெல் நாற்றுக் களை நடவு செய்யும்போது எட்டடிக்கு ஒரு அடி இடை வெளி விட்டு நடவு செய்யும் முறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
  • இதனால் பயிரு க்கு நல்ல சூரிய வெளிச்சம் கிடைப்பதோடு மண்ணில் உள்ள நுண்ணு யிர்களின் செயல் பாடு அதிகமாகி பயிர் நன்கு வளரும். மேலும் பூச்சி நோய்த் தாக்குதல் அதிக மாக இருக்காது.
  • மிகவும் நெருக்கமாக நடவு செய்வ தால் பூச்சி நோய்த் தாக்குதல் அதிகமாக இருக் கும். மேலும், பட்டம் விட்டு நடவு செய்வதால் உரமிடும்போதும், பூச்சி மருந்து தெளிக்கும்போதும் மற்றும் களை எடுக்கும்போதும் நெற்பயிர்கள் சேதம் அடையாது. இதனால் நெல் மகசூல் கூடுதலாகக் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
  • பட்டம் விட்டு நடவு செய்தால் நட்டம் ஏது மில்லை.
  • ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறை களில் ஒன்றான வயல் வரப்புகளில் தட்டைப்பயறு விதைத்தலை மேற்கொள்ள வேண்டும்.
  • நடவு வயலில் வயல் மட்டத்தில் இருந்து வரப்பின் ஓரத்தில் மூன்றில் ஒரு பங்கு உயரத்தில் தட்டைப் பயறு விதைக்க வேண்டும்.
  • இந்த தட்டைப் பயிரில் நெற்பயிரைத் தாக்காத அசுவினிகள் உற்பத்தியாகும். இதனால் ஏராளமான பொறிவண்டுகள் கவரப்படும்.
  • வரப்பில் தட்டைப் பயறு விதைப்பதால் வரப்பு சுத்தமாகி களைகள் இன்றி உள்ளதால் களைகள் மூலம் பரவும் நோய்கள் கட்டுப்படுத்தப்படுகிறது.
  • ஒரு ஏக்கருக்கு 2 கிலோ தட்டைப் பயறு மட்டும் போது மானது.
  • தட்டைப் பயறு விதைப்பதால் விவசாயிகளுக்குக் கூடுதலாக வருமானமும் கிடைக்கும்.எனவே நடவு வயலில் மேற்கண்ட தொழில்நுட்பங்களைக் கடைப்பிடித்து பூச்சி நோய்களைக் கட்டுப்படுத்துவதோடு கூடுதல் மகசூலும் பெறலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நன்றி: தினகரன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *