கத்தரி பயிரில் பூச்சி கட்டுப்பாடு

கத்தரி பயிரில்  பூச்சிகள்    அதிகம் வரும். முறையாக பூச்சி மருந்துகளை பயன் படித்தினால், பூச்சிகளை கட்டு படுத்தலாம். இயற்கை முறையில் பூச்சிகளை கட்டுபடுத்தினால் இன்னும் நலம். இதோ, கத்தரி பயிரில் பூச்சிகளை கட்டுபடுத்தும் வழிமுறைகள்:

தண்டு மற்றும் காய்த்துளைப்பான்

நடவு செய்த 15-20 நாட்களில் கத்தரிச்செடிகளின் நுனித் தண்டுகள் இலைகளுடன் காய்ந்து தலை சாய்ந்து தொங்கி காணப்படும். அவைகளைக் கிள்ளி உள்ளே பார்த்தால் வெள்ளை நிறப் புழு காணப்படும். இவ்வகைப் புழுக்கள், காய்கள் பிஞ்சாக இருந்து வளர்ந்து வரும் சமயத்தில் காய்களைக் குடைந்து சாப்பிட்டு சேதப்படுத்தும்.

இதனைக் கட்டுப்படுத்த பாதிக்கப்ட்ட  செடிகளின் நுனித் தண்டினைக் கிள்ளி எறிந்திவிடவேண்டும். பாதிக்கப்பட்ட காய்களைப் பறித்து அழித்துவிடவேண்டும். கார்பரில் 50 சதத் தூளை ஒரு லிட்டருக்கு 2-4 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்கவேண்டும். காய்களைத் தாக்கும் பருவத்தில் 15 நாட்களுக்கு ஒரு முறை எண்டோசல்ஃபான் 2 மில்லியை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவேண்டும். அல்லது குயினால்பாஸ் 25இசி 2 மில்லி ஒரு லிட்டர் தண்ணீருடன் 2 மில்லி வேப்பெண்ணெய் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து கலவையுடன் சேர்த்துத் தெளிக்கவேண்டும் அல்லது வேப்பங்கொட்டைச்சாறு 50 மில்லியை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவேண்டும்.

சாம்பல் மூக்கு வண்டு : இவ்வகைப் பூச்சிகள், இலைகளிலுள்ள சாறினை உறிஞ்சுவதால் இலைகள் சக்தியிழந்து, காய்ந்துவிடும். இதனைக் கட்டுப்படுத்த ஒரு எக்டருக்கு கார்போஃபியூரான் 15 கிலோவை செடி நட்ட 15 நாட்களுக்குப் பின்னர் செடிகளின் வேர்ப்பாகத்தில் இடவேண்டும்.

நூற்புழுக்கள் : நூற்புழுத் தாக்குதலைத் தடுக்க விதைகளை ட்ரைக்கோடெர்மா விரிடி அல்லது ட்ரைகோடெர்மா ஹர்சியானம் ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்ற அளவில் பூஞ்சாண விதை நேர்த்தி செய்து விதைக்கவேண்டும். மேலும் ஒரு சதுர மீட்டருக்கு 10 கிராம் கார்போஃபியூரான் இடுதல் வேண்டும்.

சிவப்பு சிலந்திப்பூச்சி : இதனைக் கட்டுப்படுத்த நனையும் கந்தகத் தூளை லிட்டருக்கு 2 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்கவேண்டும். அல்லது டைக்கோபால் 3 மில்லி மருந்தை 1 லிட்டர் நீருடன் கலந்து தெளிக்கவேண்டும்.
வெள்ளை ஈக்கள் : கோடை காலப்பயிரில் வெள்ளை ஈக்களின் தாக்குதல் அதிகமாக இருக்கும். இதனைக் கட்டுப்படுத்த மஞ்சள் நிற ஒட்டும் பசை அட்டைப்பொறி எக்டருக்கு 12 வீதம் வைக்கவேண்டும். வேப்பெண்ணெய் 3 மில்லியுடன் 1 லிட்டர் நீர் கலந்து, அதனுடன் டீப்பால் என்ற ஒட்டும் திவரம் 1 மில்லியுடன் ஒரு லிட்டர் தண்ணீர் கலக்கப்பட்ட கலவையுடன் சேர்த்து தெளிக்கவேண்டும்.

நோய்கள்

இலைப்புள்ளி நோய் : பருவமழைக் காலங்களில் வானம் மேக மூட்டத்துடன் இருக்கும் சமயங்களில் இலைப்புள்ளி நோய் அதிகமாகக் காணப்படும். இதனைக் கட்டுப்படுத்த டைத்தேன் எம் 45 பூசண கொல்லியினை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் என்ற அளவில் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்கவேண்டும்.
வாடல் நோய் : இந்நோய் தாக்கப்பட்ட செடிகள் குட்டையாகவும் இலைகள் சிறுத்தும் காணப்படும். இச்செடிகள் பூக்காமல் மலடாக இருக்கும். இது நச்சுயிரி வகை நோய் ஆகும். இந்நோய் தாக்கப்பட்ட செடிகளை வேருடன் பிடுங்கி எரித்துவிடவேண்டும். நோய் பரப்பும் காரணிகளைக் கட்டுப்படுத்த மீதைல்டெமட்டான் 2 மிலி (அ) டைமெத்தோயோட் 2.5 மிலி தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும்.

நன்றி: தமிழ் நாடு வேளாண்மை பல்கலைகழகம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *