“”கரும்பு பயிரில் ஏற்படும் களைகளை கட்டுப்படுத்த கரும்பு தோகை மக்க வைத்து உரமாக பயன்படுத்துவதன் மூலம் கட்டுப்படுத்த முடியும்,” என, மதுரை விநாயகபுரம் நீர் மேலாண்மை பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குனர் காதிரி தெரிவித்துள்ளார்.
கரும்பு பயிரில் கொடிவகைகளை காணப்படும்போது, மகசூல் குறைவதுடன் கரும்பை வெட்டுவதற்கும் சிரமம் ஏற்படும், வெட்டுக் கூலியும் அதிகரிக்கும்.
இக்கொடிகளை கட்டுப்படுத்த, வரப்புகளை களையின்றி சுத்தமாக வைத்திருப்பதுடன், இக் கொடிகள் பூக்கும் பருவத்திற்கு முன்பே 2.4 டி அல்லது மெட்ரிபியூசின் களைக் கொல்லியினை தெளிக்க வேண்டும்.
கரும்பின் தோகை உரிக்கும் சமயம் களை முழுதும் வேரோடு எடுத்த பின், உரிக்கப்பட்ட தோகைகளை அதன் மீது இட்டு மக்க வைப்பதன் மூலம், இக்களை தடுக்க முடியும் என, தெரிவித்தார்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்