கொய்யாத்தோட்டங்களில் இனக்கவர்ச்சி பொறிகளின் மூலம் பழ ஈயினை கட்டுப்படுத்தும் முறையினை லூதியானாவில் (பஞ்சாப் மாநிலம்) உள்ள மத்திய அறுவடைக்குப்பின் தொடர்பான பொறியியல் மற்றும் தொழில் நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தின் (CIPHET) அறிமுக படுத்தி உள்ளது.
- எத்தனால் 6 பங்கு, மெத்தில் யூஜெனால் 4 பங்கு மற்றும் 1 பங்கு மேலத்தியான் (ethanol, methyl eugenol and malathion (6:4:1))கலந்த இனக்கவர்ச்சி திரவக்கரைசல் தயாரிக்கப்பட்டது.
- தண்ணீர் உறிஞ்சக்கூடிய 2″ X 2″ பிளைவுட் துண்டுகளை இக்கரைசலில் ஊறவைத்து, ஒரு பிளாஸ்டிக் ஜாடியில் பொருத்தப்பட்டது (படம் 1).
- இந்த பிளாஸ்டிக் ஜாடிகளின் மேற்புறத்தில் எதிர் எதிர் திசையில் 1.5 செ.மீ விட்டமுள்ள ஓட்டைகள் போடப்பட்டது.
- இந்தப்பொறி ஒரு ஏக்கர் கொய்யாப்பழத்தோப்புக்கு ஒன்று வீதம் பொருத்தப்பட்டது.
- இவ்வாறு பொருத்தப்பட்டவுடன், முந்தைய அறுவடையின் போது 50-60 சதவிகிதமாக இருந்த பழ ஈக்களின் தாக்குதல், அடுத்த அறுவடையின் போது 10 சதவிகிதம் குறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
- மேலும் பழ ஈக்களின் தாக்குதலை தடுக்க, விவசாயிகள் உபயோகிக்கும் பூச்சிக்கொல்லிகளின் அளவும் 80-90 சதவிகிதம் வரை குறைக்கப்பட்டது.
- முயற்சி மற்றும் இந்த இனக்கவர்ச்சி பொறியின் செயல்படும் திறத்தினால், தற்பொழுது அபோகார் பகுதியில் 1500 ஹெக்டேர் நிலப்பரப்பில் இப்பொறியினை பயன்படுத்தப்படுகிறது.
- இவ் இனக்கவர்ச்சி பொறி கொய்யாப்பழத்தோட்டங்களில் பழ ஈயினைக் கட்டுப்படுத்த ஒரு வரமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
- பழ ஈக்களுக்கான இனக்கவர்ச்சி பொறி (பி.சோனாட்டா மற்றும் பி.கரக்ட்டா)
பி.சோனாட்டா
|
பி.கரக்ட்டா
|
ஆதாரம் : INDG இணையத்தளம்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்