கொய்யா தோட்டங்களை அழிக்கும் மாவுப்பூச்சி

மனிதர்களுக்கு ஆண்டி பயோடிக் மருந்துகள் தாறு மாறாகவும், தேவை அற்ற நேரங்களில் கொடுத்ததின் விளைவு, இப்போது, எந்த மருந்தாலும் கொள்ள முடியாத புது பக்டீரியா NDM-1 உருவாகி உள்ளது. இந்த பக்டேரியாவினால் வரும் வியாதிகளுக்கு ஒரு மருந்தும் இல்லையாம்.
பயிர்களிலும் இதே கதி தான். சக்தி வாய்ந்த ரசாயன கொல்லிகள் எல்லாம் கடந்த 50 ஆண்டுகளில் பயன் படுத்தி, இப்போது, இயற்கையில் எல்லா பூச்சி கொல்லிகலாலும் கொல்ல முடியாத புதிய பூசிகள் வர ஆரம்பித்து விட்டன.

இந்த செய்தியை பார்த்தல், மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது.

இயற்கை முறையில் இந்த பூச்சியை கட்டு படுத்தும் முறை உங்களின் யாருக்கவாது தெரிந்தால், அதை எல்லோர்க்கும் பகிர்ந்து கொள்ளவேண்டுகிறேன்

தினமலரின் செய்தி: கொய்யா மரங்கள் வெட்டி சாய்ப்பு – மாவுப்பூச்சி தாக்குதலால் விரக்தி

பனமரத்துப்பட்டி பகுதியில் மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த முடியாததால், விரக்தி அடைந்த விவசாயிகள் கொய்யா மரத்தை அடியோடு வெட்டி சாய்த்து வருகின்றனர்.

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி யூனியன் பகுதிக்கு உட்பட்ட மல்லூர், மேட்டூர், பள்ளித்தெருப்பட்டி,பெரமனூர், காளியாகோவில் புதூர், திப்பம்பட்டி, நல்லியாம்புதூர், அடிக்கரை உள்ளிட்ட இடங்களில் 1,000 ஏக்கர் பரப்பளவில் கொய்யா பயிரிட்டப்பட்டுள்ளது.

மல்லூரில் கொள்முதல் செய்யப்படும் கொய்யா  கேரளா, கோவை, நாமக்கல், ஈரோடு, திருச்சி, தர்மபுரி, பெங்களுரூ உள்ளிட்ட வெளி இடங்களுக்கு விற்பனைக்கு செல்கிறது. சீஸன் நாட்களில் நாள்தோறும் 10 டன்னுக்கும் மேற்பட்ட கொய்யா வெளி இடங்களுக்கு விற்பனைக்கு செல்வது வழக்கம்.

ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதத்தில் கொய்யா அறுவடை துவங்கி தொடர்ந்து மூன்று மாதம் வரையில் வரத்து இருக்கும்.

தற்போது, கொய்யாவில் மாவுப்பூச்சி தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளதால், கொய்யா விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. கொய்யா மரத்தின் இலைகள் சுருண்டும், கறுப்பாகவும் மாறி, மொக்குகள் தோன்றும் கொழுந்து பகுதியில் மாவுப்பூச்சிகள் கும்பலாக ஒட்டி கொள்கின்றன. பூக்களில் இருந்து தோன்றும் பிஞ்சுகளில் மாவுப்பூச்சிகள் அமர்ந்து பிஞ்சுகளில் இருக்கும் சத்துகளை உறிஞ்சி எடுத்து விடுகின்றன. பிஞ்சுகள் பெரிதாகும்போது கொய்யா காய்கள் முழுவதிலும் கரும்புள்ளிகள், வெடிப்புகள் தோன்றி சாப்பிட முடியாத அளவிற்கு சேதம் அடைந்துவிடுகின்றன. மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த முடியாததால், விரக்தி அடைந்த விவசாயிகள் கொய்யா மரத்தை அடியோடு வெட்டி சாய்த்து வருகின்றனர். உலகரைமேடு, பெரமனூர், பள்ளித்தெருப்பட்டி, மல்லூர் உள்ளிட்ட பகுதியில் கொய்யா மரத்தை டன்  1,500 ரூபாய் என விலை பேசி செங்கல் சூளைக்கு வெட்டி விற்கின்றனர்.

விவசாயிகள் கூறுகையில், “”பத்து ஆண்டுகளாக பலன் கொடுத்து வந்த கொய்யா மரங்களை மாவுப்பூச்சி தாக்கி சேதப்படுத்திவிட்டன. எந்த பூச்சிகொல்லி மருந்துக்கும் கட்டுப்படாமல், தொடர்ந்து நோய் தாக்குதல் அதிகரித்து வருகிறது. மாவுப்பூச்சி தாக்குதலில் இருந்து  ஒரு கொய்யா  பிஞ்சுகள் கூட  தப்பவில்லை. அதனால் ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் வரையில் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மரத்தில் காய்களுக்கு பதிலாக மாவுப்பூச்சி கொத்து கொத்தாக பரவி உள்ளதால், கொய்யா மரத்தை அடியோடு வெட்டி, செங்கல் சூளைக்கு விற்பனை செய்கிறோம்,” என்றனர்.

மாவு பூச்சியை பற்றிய மற்ற செய்திகள்:

கத்திரியில் மாவு பூச்சி – எப்படி கட்டுபடுத்துவது?

மல்பேர்யில் மாவுப்பூச்சி தடுக்க பூச்சி மருந்து புரபெனோபாஸ் (erodealive)


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “கொய்யா தோட்டங்களை அழிக்கும் மாவுப்பூச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *