தரமற்ற மற்றும் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை விவசாயிகள் உபயோகிக்கக் கூடாது என வேளாண் உதவி இயக்குநர் கனகலிங்கம் தெரிவித்தார்.
- தற்போது நெல், கரும்பு, உளுந்து, மணிலா பயிர்களில பூச்சி நோய் தாக்குதலுக்குச் சாதகமான சூழ்நிலை நிலவுகிறது.
- நெல் பயிரிலும் இலை சுருட்டுப் புழு, தண்டு துளைப்பான், ஆனைக்கொம்பன் ஈ பூச்சி, இலைப் புள்ளி நோய், பாக்டீரியல் இலைக்கருகல் நோய், குலை நோய், கழுத்துக் குலை நோய் தாக்குதல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
- விவசாயிகள் பூச்சி நோய் கண்காணிப்பை சரிவர மேற்கொண்டு, பயிர் பாதுகாப்பு மருந்துகளை தேவையான அளவு பயன்படுத்தி, மிகவும் பாதுகாப்பான முறையில் தெளிக்க வேண்டும்.
- விவசாயப் பயிர்களில் பூச்சிநோய் தாக்குதல் என்பது, பொருளாதார சேத நிலைக்கும் மேல் இருக்கும்பட்சத்தில், பயிர் பாதுகாப்பு மருந்துகளை தெளிக்க வேண்டும்.
- இயன்றவரை இயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகள், பூஞ்சானங்களான பஞ்ச காவ்யா, ஜீவா மிர்தம், வேப்ப எண்ணெய், வேப்பங் கொட்டை சாறு மற்றும் இயற்கை பூச்சி விரட்டிகளைப் பயன்படுத்த வேண்டும். தரமற்ற மற்றும் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை உபயோகிக்கக் கூடாது.
- ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துவதாக இருந்தால், வேளாண் அலுவலர்களின் ஆலோசனைகள் பெற்று, அதிக வீரியமில்லா மருந்துகளை, தேவையான அளவு மட்டுமே கொள்முதல் செய்து, அவற்றை பாதுகாப்பான முறையில் பயிர்களுக்கு தெளிக்க வேண்டும்.
- முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பயிருக்குத் தேவையான மருந்துகளை சரியான அளவில் பயன்படுத்த வேண்டும்.
- பயிர் பாதுகாப்பு மருந்துகளை காலை 10 மணி வரையிலும், மாலை 4 மணிக்கு பிறகும் தெளிக்க வேண்டும்.
- மருந்து கலக்கும்போது, பரிந்துரைக்கப்பட்ட அளவு தண்ணீரை கலந்து தெளிக்க வேண்டும். மருந்து தெளிப்பவர் கையுறை, காலுறை, மூக்கு, வாய், கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும். காற்று வீசும் திசையிலேயே மருந்துகள் தெளிக்க வேண்டும் என்றார்.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
One thought on “தடை செய்யப்பட்ட பூச்சிக் கொல்லி மருந்துகளை தவிர்க்கணும்”