தென்னையில் கருந்தலைப் புழுவை கட்டுப்படுத்தும் முறைகள்

கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர் மாவட்டங்களில் தற்பொழுது தென்னையில் கருந்தலை புழுத் தாக்குதல் அதிகம் உள்ளதால் அதை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண் துறையினர் யோசனை தெரிவித்துள்ளனர்.

ஒசூர் கோட்டத்தில் ஒல்லன்வாடி கிராமத்தில் உள்ள தென்னை மரங்களை ஆய்வு செய்த வேளாண்மை இணை இயக்குநர் ராஜன், வேளாண் விஞ்ஞானிகள் டாக்டர் சுந்தரராஜன், ரமேஷ்பாபு, வேளாண் உதவி இயக்குநர் நாகராஜன் ஆகியோர் கூறியது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடிசானப்பள்ளி, கொல்லப்பள்ளி, தொரப்பள்ளி, ஒன்னல்வாடி, காரப்பள்ளி, வேப்பன்ப்பள்ளி, ஊத்தங்கரை, வேலூர் மாவட்டத்தில் ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் தென்னை மரங்களில் கருந்தலைப் பழுக்களின் தாக்குதல் தென்படுகிறது.

தாக்குதலின் அறிகுறிகள்:

  • புழுத் தாக்கப்பட்ட தென்னை மட்டைகளின் அடிபாகத்தில் அறிக்கப்பட்டு சக்கைகளிலான நீளமான கூண்டுகள் காணப்படும். இதில் புழுக்கள் தென்படும்.
  • இவை மட்டைகளில் உள்ள பச்சையத்தை சுரண்டி சாப்பிடும். இதனால் மட்டைகள் காய்ந்து விடும்.

தடுக்கும் முறை:

  • கருந்தலை புழுவினால் பாதிக்கப்பட்ட ஒலைகள் மற்றும் மட்டைகளை தனியாக எடுத்து எரித்துவிட வேண்டும்.
  • இளம் மரங்களில், மைகுளோராபாஸ் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மி.லி. வீதம் கலந்து தாக்குதல் அதிகம் உள்ள மரங்களின் அடிபாகத்தில் தெளிக்க வேண்டும்.
  • காய்ப்பு வந்த மரங்களில், மரத்தின் அடிபாகத்தில் இருந்து 1.5 மீட்டர் உயரத்தில் மரத்தில் சாய்வாக துளையிட்டு அதனுள் மோனாகுரோடம்பாஸ் மருந்தை 5 மி.லி. ஊற்றி தாமிர கரைசல் கலந்த களி மண்ணால் மூடிவிட வேண்டும்.
  • வேர்மூலம் கட்டுப்படுத்தவதாக இருந்தால், வளர்ந்த வேரை சாய்வாக வெட்டி அதில் மோனோகுரோடபாஸ் கலவையை பாலிதீன் பை மூலம் கட்டி விட வேண்டும்.

நன்றி: ஒட்டன்சத்திரம்

தென்னை பற்றிய மற்ற செய்திகளை இங்கே படிக்கலாம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “தென்னையில் கருந்தலைப் புழுவை கட்டுப்படுத்தும் முறைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *