வயல்களில் உள்ள 100 சதவீத பு ச்சிகளில் 25 சதவீதம் தீமை செய்யும் பு ச்சிகள் இருந்தால், அதை விட அதிகமாக, அதாவது 75 சதவீதம் நன்மை செய்யும் பு ச்சிகளும் உள்ளன.
நன்மை செய்யும் பு ச்சிகள் தீமை செய்யும் பு ச்சிகளை தேடி உண்டு அவற்றின் இனப்பெருக்கத்தை குறைத்து, விளைச்சலை அதிகப்படுத்த வழிவகுக்கும்.
இயற்கையான பு ச்சி விரட்டிகளை பயன்படுத்துவதால், அது தீமை செய்யும் பு ச்சிகளை கட்டுக்குள் வைத்து, நன்மை செய்யும் பு ச்சிகளை அதிகரிக்க செய்யும்.
ஆனால் அதை தவிர்த்து பு ச்சிக்கொல்லிகளை பயன்படுத்தும்போது, முதலில் அழிவது நன்மை செய்யும் பு ச்சிகள் தான் எனலாம்.இதனால், நோய்களும் அதிகம் ஏற்பட்டு, விளைச்சலும் குறைகிறது.
தட்டைப் பயிரை வரப்புகளில் பயிரிட்டால், அசுவினிப் பு ச்சிகள் அதிகமாக இருக்கும்.அவற்றை சாப்பிட, நன்மை செய்யும் பு ச்சிகள் வரும். எனவே தட்டைப்பயிர் முதன்மை பயிர்களுக்கு ஒரு அரணாக விளங்கி தீமை செய்யும் பு ச்சிகளை கட்டுப்படுத்துகின்றன.
வரப்பு ஓரங்களில் மஞ்சள் வண்ணத்தில் பு பு க்கும் செண்டுமல்லி, சு ரியகாந்தி போன்ற செடிகளை பயிரிட்டால், அவை நன்மை செய்யும் பு ச்சிகளை தன்வசம் கவர்ந்திழுக்கும்.
வரப்புகளில், மக்காச்சோளத்தையும் நடலாம். இது ஒரு தாங்கி போல் செயல்பட்டு, பறவைகள், ஆந்தைகள் அதில் அமர்ந்து, தீமை செய்யும் பு ச்சிகளை உண்ண வழிவகுக்கும்.
வரப்புகளில் ஆமணக்கு செடியை நடுவதன் மூலம், வயலில் உள்ள அதிகமான பு ச்சி எது என கண்டறியலாம்.
தீமை செய்யும் பு ச்சிகளை கட்டுப்படுத்த வேப்பங்கொட்டையை அரைத்து, பயிர்களில் தௌpத்து விடலாம்.
இதனால் தீமை செய்யும் பு ச்சிகளுக்கு இனப்பெருக்கம் பாதிக்கப்பட்டு, பக்கவாதம் போன்ற நோய்களும் ஏற்பட்டு அழிந்துவிடும்.
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்