வயல்களில் நன்மை செய்யும் பூச்சிகளை அதிகரிக்கப்பதற்கான வழிமுறைகளை கூறும், பூச்சியியல் வல்லுனர் செல்வம் அவரின் அனுபவங்களை கூறுகிறார் :
- வயல்களில், 25 சதவீதம், பயிர்களையே உணவாக உட்கொள்ளும் தீமை செய்யும் பூச்சிகளும்; தீமை செய்யும் பூச்சிகளை தேடி, அதை பிடித்து உணவாக உட்கொள்ளும், 75 சதவீதம் நன்மை செய்யும் பூச்சிகளும் உள்ளன.
- தீமை செய்யும் பூச்சிகளைத் தேடி, பயிர்களின் மேல்பகுதியில் நன்மை செய்யும் பூச்சிகள் இருக்கும்.
- தீமை செய்யும் பூச்சிகள், பயிர்களின் உட்பகுதியில் இருக்கும்
- .பழங்காலங்களில் விவசாயிகள் இயற்கையான பூச்சி விரட்டிகளை பயன்படுத்தியதால், அது தீமை செய்யும் பூச்சிகளை மட்டும் கட்டுப்படுத்தியது. இப்போது எதற்கெடுத்தாலும் விவசாயிகள், பூச்சிக்கொல்லியை பயன்படுத்துகின்றனர்.
- பயிர்களுக்கு பூச்சிக் கொல்லிகளை அடிக்கும்போது, முதலில் அழிவது நன்மை செய்யும் பூச்சிகள் தான்.
- இதனால், நோய்களும் அதிகம் தாக்குகிறது; விளைச்சலும் குறைகிறது.
- பூச்சிக் கொல்லிகளால் பூச்சிகள் மட்டுமல்லாமல், வயலில் வாழும் பல நீர்வாழ் உயிரினங்களும் அழிந்து விட்டன. இன்றைய நிலத்தடி நீர் மாசுபாடு, சுற்றுச்சூழல் மாசுபாடு போன்வற்றிற்கு பூச்சிக்கொல்லிகளும் காரணம்.
- வரப்புகளில் தட்டைப் பயிரை பயிர் செய்தால், அஸ்வினிப் பூச்சிகள் அதிகமாக இருக்கும். இவற்றை உண்ண, நன்மை செய்யும் பூச்சிகள் வருவதால், இது தடுப்பரண் போல, வயலில் செயல்பட்டு, தீமை செய்யும் பூச்சிகளை கட்டுப்படுத்தும்.
- அதேபோல், மஞ்சள் வண்ணத்தில் பூ பூக்கும் பூச்செடிகளை பயிரிட வேண்டும். எடுத்துக்காட்டாக செண்டிப்பூ, சூரியகாந்தி போன்றவற்றை வரப்புகளில் நட்டு வைத்தால், அது நன்மை செய்யும் பூச்சிகளைக் கவர்ந்திழுக்கும்.
- வரப்புகளில், மக்காச்சோளத்தை ஆங்காங்கே நட்டு வைக்கலாம். இது, ‘லைவ் ஸ்டாண்ட்’ போல செயல்பட்டு, பறவைகள், ஆந்தைகள் அமர்ந்து, தீமை செய்யும் பூச்சிகளைப் பிடித்துத் தின்ன உதவும்.
- வரப்புகளில் பொறிப்பயிராக ஆமணக்கு செடியை, எட்டு அடிக்கு ஒன்றாக நட்டு வைக்கும் போது, இந்தச் செடியின் மூலமாக, வயலில் எந்தப் பூச்சி உள்ளது எனக் கண்டுப்பிடிக்கலாம்.
- மேலும், வயலை கசப்பாக மாற்ற வேப்பங்கொட்டையை அரைத்து, பயிர்களில் தெளிக்கலாம். இந்தக் கசப்பானது தீமை செய்யும் பூச்சிகளுக்கு மலட்டுத்தன்மை, பக்கவாதம் போன்ற நோய்களை உண்டு பண்ணி, பூச்சிகளை அழித்துவிடும்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்