“நெற்பயிரை அதிகளவில் தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த பூச்சிக் கொல்லி மருந்துகளை அதிகளவில் பயன்படுத்துவதால், நன்மை செய்யும் பூச்சிகளும் அழிந்து விடுகிறது’ என, வேளாண் துணை இயக்குனர் நடராஜன் தெரிவித்தார்.
நெல் சாகுபடியில் சில வகைப் பூச்சிகள் நெற்பயிரை அதிகளவில் சேதப்படுத்துகிறது. அதை கட்டுப்படுத்த விவசாயிகள் பூச்சிக் கொல்லி மருந்துகளை அதிகளவில் கையாளுகின்றனர். அதனால் நன்மை செய்யக்கூடிய பூச்சிகளும் அழிந்துவிடுகிறது. அதற்காக சுற்றுச்சூழல் மாசுபடாமல் இயற்கையோடு இணைந்த பயிர் பாதுகாப்பு மேற்கொள்ள வேண்டும்.
ஐப்பசி மாதத்தில் நெற்பயிரை இலை மடக்குப்புழு, பச்சைத் தத்துப்பூச்சி, புகையான், குருத்துப்புழு ஆகிய பூச்சிகள் அதிகம் தாக்கும்.
இலைமடக்குப்புழு, இலையின் பச்சையத்தை சுரண்டித் திண்ணும். இலைகள் நீள வாக்கில் சுருட்டப்பட்டிருக்கும். இலைகளின் நுனியும் அடியும் சேர்ந்து மெல்லிய இழைகளால் பின்னியிருக்கும். இலைகள் வெளுத்து பின் காய்ந்துவிடும். கதிர்வரும் சமயத்திலும் பின் வளர்ச்சி பருவத்திலும் தாக்குதல் அதிகமாக இருக்கும். தவிர, நெல் மணிகள் முற்றிலும் பாதிக்கும். அதன் பொருளாதார சேதநிலை பத்து சதவீதம் இருக்கும். இலை சேதம் பூக்கும் பருவம் ஐந்து சதவீதமாகும்.
பச்சை தத்துப்பூச்சி தோகையை தட்டினால் இப்பூச்சிகள் தாவும். இரவில் விளக்கு ஒளியில் கவரப்படும் துங்ரோ, மஞ்சள் குட்டை போன்ற நோய்களை இப்பூச்சிகள் பரப்பும். அதனால் பயிர் வெளிரி வளர்ச்சி குன்றும். இலை சாற்றை நடவு வயலில் தூர்கட்டும் பருவத்தில் தூருக்கு ஐந்து பூச்சிகள் பூக்கும் பருவத்தில் ஐந்து பூச்சிகள் துங்ரோ நோய் பகுதியில் தூருக்கு இரண்டு பூச்சிகளாக இருக்கும்.
புகையான் பூச்சிகள் பயிரின் அடித்தண்டு பகுதியில் இருந்து சாற்றை உறிஞ்சும். அதனால் பயிர் மஞ்சள் நிறமாக மாறி பிறகு காய்ந்து விடும். பயிர்கள் புகைந்தது போல் வட்டவட்டமாக காணப்பட்டால் பிடிக்கும் பயிர் காய்ந்துவிடும். கதிர்கள் பதராகிவிடும். பூச்சிகள் நீரில் மிதந்து அடுத்த வயலுக்கு செல்லும். இதைக் கட்டுப்படுத்த வயலில் அதிக நீர் தேங்குதல், தழைச்சத்து, நெருக்கி நடுதல், பூச்சி மருந்தடித்து இயற்கை எதிரிப்பூச்சிகள் அழித்தல் போன்றவை கையாளக்கூடாது.
குருத்துப்பூச்சியின் புழு நடுக்குருத்து சாய்ந்திருக்கும் கையோடு குருத்து வந்துவிடும். தண்டில் சிறு துவாரமும் இருக்கும். தண்டினுள் புழுவையும், கழிவுகளையும் கூட்டையும் காணலாம். கதிர் வெண் கதிராக இருக்கும். அக்டோபர் முதல் டிசம்பர் வரை அதிகளவில் தாக்குதல் இருக்கும் பொருளாதார சேத நிலை நடவு வயலில் பத்து நடுக்குருத்து காய்ந்திருக்கும்.
இரண்டு வெண் கதிர் தோன்றும் இரவு நேரத்தில் விளக்குப் பொறிகள் வைத்து இந்த நான்கு பூச்சிகளையும் கவர்ந்து அழித்தல் வேண்டும்.
பூச்சிகள் பொருளாதார சேத நிலையை தாண்டினால் மட்டுமே அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மைய களப்பணியாளர்களது ஆலோசனை பெற்று நெற்பயிருக்கு பூச்சி மருந்து தெளிக்க வேண்டும்.
அதனால் சுற்றுச்சூழல் மாசுபடாமல் நன்மை செய்யக்கூடிய பூச்சிகளுக்கு பாதுகாப்பு அளிக்க முடியும்.
தவிர, புல் பூண்டு அகற்றுதல், வரப்புகளில் களை நீக்குதல், மண் பரிசோதனைப்படி தழைச்சத்து பரித்திடல், பட்டம் விட்டு நடுதல், நன்மை செய்யும் பூச்சிகளை ஊக்குவித்தல், விளக்குப்பொறி, இனக்கவர்ச்சிப் பொறி அமைத்து பூச்சிகளை கண்காணித்தல், பைரித்திராய்டு மருந்துகளை தவிர்க்க வேண்டும்.
ஒரே சமயம் விதைப்பு, விதையுடன் பரவும் நோய்களை கட்டுப்படுத்த சூடோமோனா/டிரைக்கோடர்மா, விதை நேர்த்தி செய்தல் அவசியம். மேலும், வேப்பங்கொட்டை, வேப்ப எண்ணெயிலிருந்து தயாரித்த பூச்சி மருந்துகளையும் பயன்படுத்தலாம்.
நன்றி: தினமலர்
நெற்பயிரை பற்றிய மற்ற செய்திகளை இங்கே படிக்கலாம்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
Its a complete package of al natural fertilizers and pesticides. If you provide information about how much we have to use for 1 acre and whst is the expiry date for each of these it will be more helpful