நெற்பயிரைக் காக்க இயற்கைப் பூச்சிக் கொல்லி மருந்துகளை சுயமாக தயாரிப்பது எப்படி என்பது குறித்து, வேளாண் விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
நெற்பயிர்களில் அண்மைக்காலமாக அதிக நச்சுத்தன்மையுள்ள பூச்சிக் கொல்லி மருந்துகள், அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சில பூச்சிகள் இந்த மருந்துக்கு எதிர்ப்புத் திறன் பெற்று விட்டதால், அவற்றைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
அதிக நச்சுத்தன்மையுள்ள மருந்துகளை பயன்படுத்துவதால், பயிர்களை தாக்கும் பூச்சிகளை இயற்கையிலேயே பெருகா வண்ணம் தடுத்து நிறுத்தும், நன்மை செய்யும் பூச்சிகள் அழிகின்றன. அத்துடன் சுற்றுச்சூழலும் பாதிக்கிறது.
இதைத் தடுக்க, இயற்கைப் பூச்சிக் கொல்லி மருந்துகளை பயன்படுத்தலாம். இதை விவசாயிகள் எப்படி சுயமாக தயாரிப்பது என்பது குறித்து வேளாண் விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
மருந்து தயாரிக்கும் முறை
இதுகுறித்து, திரூர் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் தேவநாதன், பேராசிரியர் முத்துராமலிங்கம் ஆகியோர் கூறியதாவது:
நெற்பயிருக்கு இயற்கை பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்துவதால், நமக்கு தீமைகள் ஏதுமில்லை. இயற்கைப் பூச்சிக் கொல்லிகள் ஒருகுறிப்பிட்ட இனப்பூச்சிகளை மட்டுமே தாக்கி அழிக்கும். சுற்றுச்சூழலையும் பாதிப்பதில்லை.
- வேலிக்காத்தான், நாச்சி, கடல்பாளை ஆகிய தாவரங்கள் ஏதேனும் ஒன்றின் இலைகளைப் பறித்து நிழலில் உலர வைக்க வேண்டும்.
- ஒரு ஏக்கருக்கு, 20 கிலோ காய்ந்த தூள் தேவைப்படும். இவற்றை பொடி செய்து ஒரு லிட்டர் தண்ணீருக்கு, 100 கிராம் என்ற அளவில், ஒரு ஏக்கருக்கு, 20 கிலோ தூளை, 10 முதல், 20 லிட்டர் நீரில், 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
- பின்னர் நன்கு வடிகட்டி அதனுடன், 180 முதல், 190 லிட்டர் தண்ணீர் சேர்க்க வேண்டும்.
- இவற்றுடன் டீபால், டிரைடான் அல்லது சாண்டோவிட் போன்ற ஒட்டும் திரவத்தை, 100 மி.லி., என்ற அளவில் கலந்து கரைசலை தெளிப்பதற்கு பயன்படுத்தலாம்.
நெற்பயிருக்கு இயற்கை பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்துவதால், நமக்கு தீமைகள் ஏதுமில்லை. இயற்கை பூச்சிக்கொல்லிகள் ஒரு குறிப்பிட்ட இனப்பூச்சிகளை மட்டுமே தாக்கி அழிக்கும்.
நெற்பயிரில் இயற்கை பூச்சி கட்டுப்பாடு பற்றிய மற்ற வழிகளை இங்கே படிக்கலாம்
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்