நெல் சாகுபடியில் குலை நோய்

தற்போது நிலவி வரும் பருவநிலை காரணமாக நெல் பயிரில் குலை நோய் தாக்குதல் சில இடங்களில் காணப்படுகிறது.

நோய்க்கான காரணங்கள்

  • குறைவான இரவு வெப்ப நிலை, அதிகப்படியான ஈரப்பதம், மேகமூட்டத்துடன் லேசான தூறல், அதிக தழைச்சத்து, முந்தைய பருவத்தின் பயிர் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாவிட்டால், குலை நோய் தாக்கும்.
  • நெல் விதைகளை நாற்றங்கால் தயாரிப்பதற்கு முன்பு சூடோமோனஸ் ப்ளுரொசன்ஸ் உயர் பூஞ்சாண கொல்லியுடன் 10 கிராம் ஒரு கிலோ விதைக்கு என விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
  • கூடுதலாக தழைச்சத்து இடுதலை தவிர்த்து, குலை நோய் தாக்காத ரகங்களை தேர்வு செய்ய வேண்டும்.
  • அதிகப்படியான தண்ணீர் வயலில் தேங்குவதை தவிர்த்து, வரப்பில் காணப்படும் களைச்செடிகளை அப்புறப்படுத்தினால், நோய் வராமல் தவிர்க்கலாம்.

அறிகுறிகள்:

  • பைரிகுளோரியா ஒரைசா என்ற பூசாண நோய் கிருமி இலைகளை தாக்கும்.
  • தாக்கப்பட்ட இடத்தில் சாம்பல் நிறப்புள்ளிகள் பழுப்பு நிற எல்லை கோடுகளுடன் வைர வடிவத்தில் அல்லது உருளை வடிவத்தில் காணப்படும்.
  • புள்ளிகள் ஒன்று சேர்ந்து தீ பட்டது போல் அறிகுறிகளை ஏற்படுத்தும்.
  • கதிர்களில், மணிகளிலும் இது போன்ற தாக்குதலை ஏற்படுத்தும். இதனால், நெல் மணிகள் பதர்களாக மாறுகின்றன.
  • பயிரின் தண்டுப்பகுதிகளிலும் பழுப்பு நிறப்புள்ளிகள் காணப்படும்.

தடுக்கும் முறைகள்:

  • தாக்குதல் தென்பட்டதும், கார்டென்டிசம் 250 கிராம் ஒரு எக்டருக்கு என்ற அளவில் தெளிக்க வேண்டும்.
  • தாக்குதலின் தன்மை தீவிரமாக காணப்பட்டால், ட்ரைசைக்ளோசால் 75 என்ற மருந்தை ஒரு எக்டருக்கு 500 கிராம் தெளிக்கலாம்.
  • மருந்துகளை காலை அல்லது மாலை வேளைகளில் தெளிக்க வேண்டும்.
  • மழை பெய்யும் நேரத்தில் மருந்து தெளிக்க கூடாது என

இவ்வாறு வேளாண்மை இணை இயக்குனர் முத்துசாமி அறிவுரை அடிப்படையில் வேளாண் உதவி இயக்குனர் சைலஸ் தெரிவித்துள்ளார்.

நன்றி: தினமலர்

நெல் பற்றிய மற்ற இடவுகளை இங்கே படிக்கலாம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *