நவரை நெல் பயிரில் இலை சுருட்டுப் புழுவை கட்டுப்படுத்த வேளாண்மை துறை உதவி இயக்குனர் அசோகன் ஆலோசனை வழங்கியுள்ளார்.
தற்போது பால் பருவத்திலுள்ள பின்பட்ட நவரை நெல்பயிரில் இலை சுருட்டு புழுவின் தாக்குதல் காணப்படுகிறது.
இலை சுருட்டுப் புழுவின் புழுக்கள் இலைகளை நீள வாட்டத்தில் மடித்து பச்சையத்தை சுரண்டி உண்பதால் பாதிக்கப் பட்ட இலைகள் திட்டு திட்டாக வெள்ளையாக இருக்கும்.
இலைகளின் பச்சையம் புழுக்களால் சுரண்டி உண்பதால் ஒளிசேர்க்கை குறைந்து பயிரில் வளர்ச்சி பாதிக்கப்படும்.
இப்பூச்சிகள் தாக்குதல் தென்படும் வயல்களில் ட்ரைஅசோபாஸ் 1,000 மி.லி., அல்லது பாசலோன் 1,500 மி.லி., அல்லது குயினல் பாஸ் 1,000 மி.லி., இவற்றில் ஏதேனும் ஒன்றினை வாங்கி ஒரு எக்டருக்கு 500 லிட்டர் தண்ணீரில் கலந்து காலை அல்லது மாலை வேளையில் கை தெளிப்பான் மூலம் தெளித்து கட்டுப்படுத்தலாம்.
மேலும் விவரங்களுக்கு குறிஞ்சிப் பாடி, குள்ளஞ்சாவடி வேளாண்மை விரிவாக்க மைய அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.
நெல் பற்றிய மற்ற இடவுகளை இங்கே படிக்கலாம்
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
One thought on “நெல் பயிரில் இலை சுருட்டுப் புழுவை கட்டுபடுத்துவது எப்படி?”