நொதித்த ஆமணக்கு கரைசல் செய்வது எப்படி
5 கிலோ ஆமணக்கு விடைகளை நன்கு அரைத்து 5 லிட்டர் நீருடன் கலந்து எந்த வித இடையூறும் இன்றி 10 நாட்கள் நொதிக்க வைக்க வேண்டும்
அதே சமயத்தில் 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட 5 பானைகள் 1 ஏக்கர் நிலத்தில் வைக்க வேண்டும்.
ஒவ்வொரு மண் பானையிலும் 2 லிட்டர் நொதித்த கரைசலை சேர்க்க வேண்டும் . மீதி பகுதிக்கு நீரை சேர்க்க வேண்டும்
இந்த கரைசலை மரத்தின் அருகே புதைத்து வைத்தால் துர்நாற்றத்திற்கு பூச்சிகள் பானையை நோக்கி வந்து விழுந்து இறந்து விடும். 2 நாட்களுக்கு ஒருமுறை பூச்சிகளை தூக்கி எரிந்து விட்டு மீண்டும் அதே கரைசலை பயன் படுத்தலாம்.
3 மாதம் வரை இந்த கரைசலை பயன் படுத்தலாம்
இந்த கரைசல் குறிப்பாக கூன் வண்டு சாம்பல் நிற வண்டு காண்டாமிருக வண்டு
இவற்றை கட்டு படுத்தும். எலிகள் நிலத்தில் வராமல் தடுக்கும். பருத்தி நிலக்கடலை போன்ற பயிர்களில் சாம்பல் நிற வண்டை எளிதாக கட்டுப்படுத்தலாம்.
தகவல்
சக்திவேல்
தாளவாடி, சத்தியமங்கலம் அலைபேசி 09486316041
நன்றி:TNAU
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்