பயிர்களை பாதுகாக்க பறவை படுக்கைகள்!

செயற்கையாக தயாராகும் பயிர் பாதுகாப்பு மருந்துகளை பயன்படுத்தாமல் அந்த நிலத்தில் கிடைக் கும் பொருட்களை பயன்படுத்தி பயிரை காப்பது தான் சிறந்தவழி.

  • வேலிப்பகுதியில் உள்ள மரக்கிளைகளில் பறவைகள் உட்கார வசதி செய்ய வேண்டும். மரங்கள் இல்லாவிட்டால் தரையிலிருந்து 5 – 6 அடி உயர குச்சிகளை “டி’ வடிவில், கவட்டை வடிவில் கட்டினால்  பறவைகள் உட்கார முடியும்.
  • இதன் மூலம் வயலில் உள்ள தாய்ப்பூச்சி, புழு மற்றும் கூட்டுப்புழுக்களை பறவைகள் பிடித்து உண்ணும். இரவில் உலா வரும் ஆந்தை, கூகை, கோட்டான்களும் அமர்ந்து எலிகளை பிடித்து உண்ணும். இதற்கு ரசாயன மருந்தோ, வேறு செலவுகளோ தேவையில்லை.
  • ஏக்கருக்கு 20 இடங்களில் இதுபோன்ற பறவை இருக்கைகளை நிரந்தரமாக கட்டி வைத்தால் அறுவடை காலத்தில் சேதத்தை தவிர்க்கலாம்.
  • காலி டப்பாக்கள், பெரிய டின், பயன்படாத சைக்கிள் டயர், கார் டயர், கம்பு, மருந்து டப்பாக்களிலும் ஆங்காங்கே கட்டி தொங்கவிட்டால் பறவைகள் அவற்றை கூடுபோன்று பயன்படுத்தும்.

Perching method

 

 

 

 

 

 

 

 

 

 

 

Image courtesy: Daily star

முனைவர் பா.இளங்கோவன், தோட்டக்கலை உதவி இயக்குனர்,
ஒழுங்குமுறை மார்க்கெட் கமிட்டி வளாகம், உடுமலைபேட்டை.

நன்றி:தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

3 thoughts on “பயிர்களை பாதுகாக்க பறவை படுக்கைகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *