பருத்தியில் இயற்கை வழி பூச்சி மேலாண்மை

பருத்தியில் இயற்கை வழி பூச்சி மேலாண்மை வழிகளை பார்ப்போமா?

இலை தத்துப் பூச்சி மேலாண்மை:

  • எம். சி. யூ 3, எம். சி. யூ 5  மற்றும் எம். சி. யூ 9 போன்ற எதிர்ப்புத்திறனுள்ள இரகங்களைப் பயிரிடுதல்.
  • விளக்குப் பொறி வைத்து பூச்சிகளைக் கவர்ந்து அழித்தல்.
  • கிரைசோபா கமீனா என்ற ஒட்டுண்ணியை விடுதல்.
  • மழை அதிகமாகப் பெய்யும் காலங்களில், பூச்சிகளின் தாக்கத்தைக் குறைக்க காலத்திற்கு முன்னதாக மற்றும் பருத்திகளின் இடைவெளியைக் குறைத்தும் பயிரிட வேண்டும்.

பருத்தி அசுவுணி மேலாண்மை:

  • உயிரியல் முறை கட்டுப்பாட்டுக் காரணிகளான பொறி வண்டுகளை விடுதல்.
  • ஒட்டுண்ணி : ஃபைலோகோமஸ் டிரிஸ்டிஸ்

இலைப் பேன் மேலாண்மை:

  • சாறு உறிஞ்சும் பூச்சிகளின் இளம் குஞ்சுகள் மற்றும் முதிர் பூச்சிகள் போன்றவற்றை நடவு நட்ட 14 வது நாட்களில் கட்டுப்படுத்துதல்.

பருத்தி செந்நாவாய்ப்பூச்சி மேலாண்மை:

  • உயிரியல் முறை கட்டுப்பாட்டுக் காரணிகளான ஹெர்ஃபாக்டர் காஸ்டலிஸை விடுதல்.

நன்றி:  தமிழ் நாடு வேளாண் பல்கலை கழகம்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *