பாரம்பரிய வேளாண்மையில் பூச்சி, நோய் மேலாண்மை

  • இடைவிடாது மழை தூறிக்கொண்டே இருந்தால். அதிக எண்ணிக்கையில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் ஏற்படும்.
  • டிசம்பர் மாதத்தின் கடைசியில் காற்று அடித்தால், அதிக பூச்சியைக் கொண்டு வரும்.
  • காரத்தன்மையுள்ள நிலத்தில் சாகுபடி செய்த பயிரில் நோய் தாக்குதல் அதிகமாக இருக்கும்.
  • வயல்களைச் சுற்றி, சோளம் அல்லது கம்பு பயிரை அடர்வாக 4 வரிசை சாகுபடி செய்தால், அது அசுவினி, சிலந்திபேன் பூச்சிகள் வயலின் உள்ளே போகமுடியா வண்ணம் அதன் தாக்குதலைத் தடுக்கலாம்.
  • தங்க அரளி மற்றும் செவ்வரளி செடியை வரப்புப் பயிராகப் பயிரிட்டால் அது கவர் செடியாக செயல்பட்டு அது பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்தும்.
  • திருநீற்றை செடியின் மீது தூவினால், அது பூச்சித் தாக்குதலைக் குறைக்கும்.
  • அடுப்புச் சாம்பலை இட்டால் அசுவினி கட்டுப்படும்.
  • 5 கிலோ புகையிலைத் தூளை 10 லிட்டர் கோமியத்தில் மற்றும் 10 லிட்டர் தண்ணீர் கலந்த கலவையில் 5 நாட்கள் ஊறவைத்து சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.
  • கோமியம், வேப்ப எண்ணெய் மற்றும் புகையிலை வடிநீரையைக் கலந்து,  தெளித்தல் சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.
  • எருக்களை இலை மற்றும் வேப்பம் புண்ணாக்கு இவற்றை மண் கலத்தில் இட்டு, நீர் ஊற்றி வயலில் வைத்தால் அந்துப்பூச்சிகள் அதன் வாடையால் கவரப்பட்டு மண் கலத்தில் விழுந்து இறக்கும்.
  • 10 லிட்டர் கோமியம், 5 லிட்டர் நீர் கலந்து கலவையில் 5 கிலோ எருக்களை இலையை 5 நாட்கள் ஊற வைத்து, பின் வடிகட்டி அத்துடன் 80 லிட்டர் நீர் கலந்து தெளித்தால் பயிரை உண்ணும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.
  • சர்வோதய சோப் கட்டி கரைசலை தெளித்தால், மாசுப்பூச்சி கட்டுப்படும்.
  • நூற்புழுவைக் கட்டுப்படுத்த புங்கம் அல்லது இலுப்பை புண்ணாக்கை இடவேண்டும்.
  • நீர்ப்பாசன வாய்க்கால் அருகில் சாணி, கோமியம், எருக்களை இலை வேப்பம்புண்ணாக்கை குழிகளில் இட்டுபின் அவைகள் மட்கியவடன் தண்ணீருடன் கலந்து விடவேண்டும்.
  • ஊமத்தை காயோடு, எருக்களை இலையை அரைத்து 15 நாட்கள் நீரில் ஊறவைத்துப்பின், வடிகட்டி தெளித்தால் அனைத்துவிதப் பூச்சிகளையும் கட்டுப்படுத்தலாம்.
  • தும்பை, குப்பைமேனி, துளசி, ஊமத்தை, வேம்பு, நொச்சி இலைகளை ஒவ்வொன்றும் இரண்டு கைநிறைய எடுத்து, அதனுடன் 5 ஊமத்தை காய் ஒரு கை நிறைய வேப்பம் புண்ணாக்கு ஒரு கை நிறைய இலுப்பை புண்ணாக்கு  சேர்ந்து இடித்து, அதை மண் கலத்தில் இட்டு, தண்ணீர் சேர்த்து 10 நாள் வைத்திருந்து, வடிகட்டி 100 மில்லி லிட்டருக்கு 1 லிட்டர் தண்ணீர் கலந்து, அதில் 100 மிலி சர்வோதய சோப் கரைசல் 100 மிலி வேப்பஎண்ணெய் சேர்த்து தெளித்தால்  எல்லாவிதப் பூச்சிகளையும் கட்டுப்படுத்தும்.
  • துளசி இலை, செவ்வரளி விதை மற்றும் ஊமத்தைக் காய்களை சம அளவில் எடுத்து அதைத் தூளாக்கி கோமியத்தில் ஊறவைத்து 10 நாட்கள் கழித்து எடுத்து அதை வடிகட்டி, நீர்த்து (100 மிலி / லிட்டர்), 100 மிலி வேப்ப எண்ணெய் சேர்த்து தெளித்தால் எல்லாவிதமான பூச்சிகளும் கட்டுப்படும்.
  • வேப்பஎண்ணெய் மற்றும் வேப்பங்கொட்டை கரைசல் அநேக பூச்சிகளைக் கட்டுப்படுத்த பொதுவாகப் பயன்படுத்தும் அங்கக பூச்சிக்கொல்லி ஆகும்.
  • கார்த்திகை மாதத்தில் பெளர்ணமியன்று, பொதுவான இடத்தில் சொக்கப்பானை கொளுத்தும் விழாவின் போது அந்துப்பூச்சிகளை கவர்ந்து, தீயின் விழுந்து இறக்கும். அந்தச் சாம்பலை வயலில் தூவினால் அது சாறு உறிஞ்சும் பூச்சியைக் கட்டுப்படுத்தும்.
  • பயிர் கழிவுகளையெல்லாம் எரித்து, அந்தச் சாம்பலை தூவினால் நோய் தாக்குதல் கட்டுப்படுத்தும்.
  • வேப்பம் புண்ணாக்கை அடியுரமாக வயலில் இட்டால், நோய் தாக்குதல் ஏற்படாது.
  • மஞ்சள் தேமல் நோயைக் கட்டுப்படுத்த, 1 கிலோ சீமைக்கருவில் இலைகளை இடித்து தண்ணீர் கலந்து தெளிக்க பயன்படுத்தலாம்.
  • அநேக பூச்சிகளைக் கட்டுப்படுத்த கோமியத்தைத் தெளிக்கலாம்.
  • பூண்டு மற்றும் வேப்பம் புண்ணாக்கு கரைசலைத் தெளித்தால் அசுவினி கட்டுப்படும்.
  • பிரண்டையை வயல்சுற்றி நட்டால், கரையான் தொல்லை தடுக்கப்படும்.
  • கரையானைக் கட்டுப்படுத்த, ஆமணக்கு செடியை சாகுபடி செய்யலாம்.
  • நாற்றாங்கால் வேப்பிலையை பரப்பினால், கரையான் தொந்தரவு கட்டுப்படும்.
  • பாசன வாய்க்காலில், வேப்பம் புண்ணாக்கு நிரப்பப்பட்ட சாக்கு மூட்டையை வைத்தால், சிலந்திப்பேன் தொல்லை கட்டுப்படும்.
  • புல் நிலத்தில், நாற்றாங்காலில் கரையான் தாக்குதலினால் நாற்றுக்கள் அழியும். அதற்கு வேப்பிலையை நாற்றக்காலின் மீது பரப்புவதோடு, ஆட்டு முடி, மனித முடியைச் சேர்த்து போட்டால், அதைக் கரையான் தின்றால் சாகும்.
  • ராகி வேர் வடிநீரை வேர்ப்பகுதியில் ஊற்றினால், கரையான் தொல்லை இருக்காது.
  • மரம் நடவு செய்வதற்கு முன்பு, காய்ந்த இலைகள் மற்றும் தழைகளை குழிகளில் போட்டு எரித்தால், நடும் நாற்றில் கரையான் தாக்குதலிலிருந்து காக்கலாம்.
  • மரக் கன்றுகள் நடுவதற்கு முன்பு அந்தக்குழியில் சாம்பலைப் போட்டால் கரையான் தாக்குதலைத் தடுக்கலாம்.
  • 5 சதவீதம் கரைசலை மரத்தின் மீது தெளித்தால், கரையான் தாக்குதல்  குறையும்.
  • புகையிலை அறுவடை செய்தபின்பு, அதன் தண்டு மற்றும் வேர்களை நிலத்திலே மடக்கி உழவு செய்தால் கரையான் தொல்லைக் கட்டுப்படும்.
  • எறும்புப்புற்றின் மீது புகையிலை நீரை ஊற்றினால், எறும்பைக் கட்டுப்படுத்தலாம்.
  • தானியக் கிடங்கில் உள்ள பூச்சிகளைக் கட்டுப்படுத்த காலை வேளைகளில் எந்தவொரு தெளிப்பையும் செய்தல்வேண்டும்.

நன்றி: தமிழ் நாடு வேளாண் பலகலை கழகம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “பாரம்பரிய வேளாண்மையில் பூச்சி, நோய் மேலாண்மை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *