பயிர்களுக்கும், விவசாயிகளுக்கும் புதிய தலை வலி கொடுக்க வந்துள்ள இந்த மாவுப்பூச்சியை பற்றி படிக்க படிக்க பிரமிப்பாக இருக்கிறது. இப்படியெல்லாம் ஒரு பூச்சி இருக்குமா என்று.
சக்தி வாய்ந்த ரசாயன பூச்சிகொல்லிகள் சாதாரணமாக பயன் படுத்தியதால், இப்போது, இயற்கை, இப்படி எதிர்த்து செயல்படுகிறதோ என்னவோ?. பரிணாம வளர்ச்சியால் இப்படி புதிய ராட்சசன் முளைத்து இருக்கிறதோ என்னவோ?
இதோ, சூப்பர் வில்லன் மாவு பூச்சியின் சிறப்பு இயல்புகள்:
- காற்று மற்றும் நீர் வழியாக பரவும்
- ஒன்றல்ல, இரண்டல்ல, 300 வகை தாவர இனங்களை வேகமாக தாக்கி அழிக்கக்கூடியது.
- பஞ்சு போன்ற உடல் அமைப்பு தாவரங்களின் சத்தை எடுத்துக் கொள்கிறது.
- மழைக்காலத்தில் கட்டுப்படுகிறது; வெயில் காலத்தில் வேகமாக பரவுகிறது.
- இது டாப் பாயிண்ட் -ஆண் பூச்சி இல்லாமல், பெண் பூச்சிகள் முட்டையிடும் தன்மை பெற்றுள்ளன!
- ஒரு முறை 300 முட்டை வரை இடக்கூடியவை.
- அழிக்க முடியாத பார்த்தீனியா உள்ளிட்ட களை செடிகளையும் தாக்குகின்றன.
- இப்பூச்சியானது ஆண்டுபயிர்கள், பழப்பயிர்கள், காய்கறிகள், பூச்செடிகள், களைகள், அலங்காரச் செடிகள், கரும்பு, ஆகியவற்றை தாக்கி வருகின்றன. பெரும்பாலும் பப்பாளி, மல்பெரி, கொய்யா, மரவள்ளி, பருத்தி, தேக்கு, காட்டாமணக்கு, செம்பருத்தி புலுமேரியா போன்ற பயிர்களை தாக்குகிறது. (ஹ்ம்ம், எந்த பயிரையும் விடவில்லை)
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
One thought on “புதிய ராட்சசன் – மாவுப்பூச்சி”