- பூச்சிமருந்து பயன்படுத்தும்போது கவனிக்கவேண்டியவை
- பூச்சி (௮) நோய் தாக்குதலை கண்காணித்து தேவைகேற்ப மருந்து
தெளிக்கவும். - பரிந்துரைக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட மருந்துகளை மட்டும்
தெளிக்கவும். - மருந்து கலன் மேல் உள்ள பரிந்துரைகளை கவனமாக பின்பற்றவும்.
பரிந்துரைக்கப்பட்ட அளவு மருந்து மற்றும் தெளிப்பு நீரை
உபயோகிக்கவும். - தெளிப்பான் மற்றும் தெளிப்பு முனைகளை சரியாக பராமரிக்கவும்.
கலக்கப்பட்ட மருந்தை உடனடியாக உபயோகிக்கவும். - மருந்து தெளிக்கும்போது பாதுகாப்பு உடைகளை அணியவும்.
தெளிக்கும் மருந்துகளை பற்றிய குறிப்புகளை பதிவு செய்யவும்.
மருந்துகளை குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்கவும்.
மருந்துகளை பாதுகாப்பான மற்றும் குளிர்ந்த இடத்தில் சேமிக்கவும்.
மருந்து தெளிக்க உபயோகித்த கொள்கலன்களை நன்றாக கழுவி
வைக்கவும். - காலியான மருந்து கலன்களை சரியான முறையில் அப்புறபடுத்தவும்
(குழிதோண்டி புதைத்துவிடவும்). - கொட்டிய திரவ மருந்தை அப்புறபடுத்த மரத்தூள் அல்லது மணலை
பயன்படுத்தியபின் சுண்ணாம்பு கரைசலை சேர்த்து நச்சு முறிவு செய்து
புதைத்து விடவும். - மருந்து தெளித்த வயலில் கால்நடைகள் மற்றும் வளர்ப்பு பிராணிகள்
செல்லாமல் பார்த்துக்கொள்ளவும். - எதிர்பாரத விபத்தின்போது உடனடியாக அருகாமையில் உள்ள மருத்துவரை அணுகவும்.
- பதிவுசெய்யப்படாத, பரிந்துரைக்கபடாத மற்றும் தடை செய்யப்பட்ட
மருந்துகளை உபயோகபடுத்தகூடாது. - பரிந்துரைக்கப்பட்ட அளவிற்குமேல் பயன்படுத்தகூடாது.
- தொடர்ந்து ஒரே மருந்தை பயன்படுத்தகூடாது.
- இரண்டு ஒவ்வாத மருந்துகள்/உரங்கள்/நுண்நூட்டங்களை கலக்ககூடாது.
மருந்துகளை அதற்குரிய கொள்கலனில் இருந்து வேறுகலனுக்கு
மாற்றக்கூடாது. - காலியான மருந்து கொள்கலன்களை வயலிலோ, நீர்நிலைகளிலோ எறியகூடாது.
- காலியான மருந்து கொள்கலன்களை பயன்படுத்தகூடாது.
- மருந்து தெளிக்கும்போது உணவு/நீர் அருந்துதலோ (அ) புகைபிடித்தலோ
- கூடாது.
- உடல்நிலை பாதிக்கப்பட்டபோது மருந்துகளை கையாளகூடாது.
- காலாவதியான மருந்துகளை பயன்படுத்தகூடாது.
- வெறும் கைகளால் மருந்துகளை கலக்கக்கூடாது.
- காற்றின் திசைக்கு எதிராக மருந்து தெளிக்ககூடாது.
- மீதமான மருந்தை வரப்பு ஓரத்திலோ (௮) மற்ற பயிரிலோ
தெளிக்ககூடாது.
Courtesy: TNAU
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்