ஆந்திராவிலும் சத்திஸ்கர் மாநிலத்திலும் உள்ள விவசாயிகள் கோகோ கோலா மற்றும் பெப்சி பயன் படுத்தி பூச்சிகளை கட்டுபடுத்தி வெற்றி அடைந்து உள்ளார்கள் என்று பிரிட்டின் இல் இருந்து வெளி வரும் மதிப்பு உரிய நாளிதழ் ஆன கார்டியன் கூறுகிறது!
ஆந்திராவை சேர்ந்த லக்ஷ்மயா என்ற பருத்தி விவசாயி கூறிகையில் ” பருத்தியில் நான் கோகோ கோலாவை தெளித்த போது புழுக்கள், பூச்சிகள் இறப்பதை பார்த்தேன். இந்த முறையை எங்கள் ஊரில் பல இடங்களில் பயன் படுத்துகிறோம்” என்றார்
விவசாய அறிஞர் ஆன தேவிந்தர் ஷர்மா கூறுகையில் “கோக் பானத்தில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை இருக்கிறது. அதை தின்ன வரும் சிவப்பு எறும்புகள், புழுக்களையும் தின்று விடுகின்றன” என்றார்.
ஒரு லிட்டர் ரசாயன பூச்சி கொல்லி அவன்ட் Avant, நுவோக்ரோன் Nuvocron போன்றவை 10000 ரூபாய் வரை செலவு ஆகிறது. ஆனால் கோகோ கோலா பாட்டில் 30 ரூபாய். 10 பாட்டில் வாங்கி ஒரு எக்கரை பருத்தியில் தெளிக்க தேவை 300 ரூபாய் தான் ..
இதை பற்றிய கருத்து கூறிய கோகோ கோலா கம்பெனி “எங்கள் பானத்தில் பூச்சி கொல்லி ஒன்றும் இல்லை.” என்றார்.
இந்த செய்தியை BBC நிறுவனமும் தெரிவித்து உள்ளது.
ஆகவே பருத்தி பயிர் இடும் விவசாயிகளே இந்த முறையை பயன் படுத்தி பார்ப்பதில் குறை ஏதும் இல்லை!!
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
good idea!
Super.