நாட்டில் விற்பனை ஆகும் பூச்சி மருந்துகளில் நான்கில் ஒன்று போலியாம். இதை தவிர, காலாவதி ஆன பூச்சி மருந்துகள், தவறான மருந்துகள் என்று வேறே.. இதை பற்றி தினமலரில் வந்த செய்தி:
நடப்பு 2011-12ம் நிதியாண்டில், நாட்டில் போலி பூச்சி மருந்துகள் விற்பனை 2,000 கோடி ரூபாயை தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
உள்நாட்டில், பூச்சி மருந்துகளுக்கான சந்தை மதிப்பு, 8,000 கோடி ரூபாய் என்றளவில் உள்ளது. இதில், போலி பூச்சி மருந்துகளின் மதிப்பு 2,000 கோடி ரூபாய் அளவிற்கு இருக்கும் என, கிராப் லைப் இந்தியா நிறுவனம், தொழில்நுட்ப வேளாண் நிறுவனங்களுடன் சேர்ந்து மேற்கொண்ட ஆய்வின் வாயிலாக தெரியவந்துள்ளது.
பொதுவாக, போலிபூச்சி மருந்துகள், அதிகளவில் வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன. இப்பூச்சி மருந்துகள், பூச்சிகளை அழிப்பதில்லை. இதனால், விவசாயிகளுக்கு கூடுதல் செலவு மட்டுமே ஆகிறது என, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கிராப் லைப் இந்தியா நிறுவனத்தின் தலைமை செசயல் அதிகாரியும், இயக்குனருமான பி.கே. மஜூம்தார் கூறுகையில்,” கடந்த நிதியாண்டில் உள்நாட்டில் பூச்சி மருந்துகளின் விற்பனை 1,600 கோடி ரூபாய் மதிப்பிற்கு இருந்தது. இதில், 500 கோடி ரூபாய் மதிப்பிற்கான பூச்சிமருந்துகள் துணை பொருள்கள் பிரிவின் கீழ் இடம்பெற்றிருந்தன’ என்றார்.
நடப்பாண்டு ஜூலை மாதத்தில், ஆந்திர மாநிலத்தின் வேளாண்துறை, 309 வகையான போலி பூச்சிமருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக ஆந்திரா, கர்நாடக, மகாராஷ்டிரம் ஆகிய மூன்று மாநிலங்களிலுமாக, போலி பூச்சிமருந்துகளின் விற்பனை 65 சதவீத அளவிற்கு உள்ளது.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்