மஞ்சள் பயிரில் இலைப்புள்ளி நோய்த் தாக்குதல் அதிகமாக இருப்பதால், அதைக்கட்டுப்படுத்தும் முறை குறித்து டாக்டர் பெருமாள் வேளாண்மை அறிவியல் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜ் தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தில் நிலவும் மந்தமான தட்பவெட்பம், காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் மஞ்சள் பயிரில் இலைப்புள்ளி நோயின் தாக்கம் அதிகமாக தென்படுகிறது.
அறிகுறிகள்: இந்நோய் தாக்கிய பயிரின் இலைகளின் மேல்புறத்தில் சிறு சிறு கண் வடிவப் புள்ளிகள் தோன்றிப் பழுப்பு நிற புள்ளிகளாக மாறும். நாளடைவில் நோய் தீவிரமடையும் போது புள்ளிகள் ஒன்றோடொன்று இணைந்து பெரிதாகி இலைகள் காய்ந்து விடும். இதனால் பயிரின் வளர்ச்சி பாதிக்கப்படும்.
கட்டுப்படுத்தும் முறை: இந்நோயை கட்டுப்படுத்த, நோய் பாதிக்கப்பட்ட இலைகளை உடனே பயிரிலிருந்து கிள்ளி அகற்றி அழிக்க வேண்டும்.
மேலும் ஒரு ஏக்கருக்கு கார்பென்டசிம் 200 கிராம் அல்லது காப்பர் ஆக்சிகுளோரைடு 500 கிராம் அல்லது மேன்கோசெப் 400 கிராம் மருந்தை 15 நாள்கள் இடைவெளியில் இரு முறை தெளிக்க வேண்டும். இவ்வாறு தெளிப்பதன் இலைப்புள்ளி நோயை கட்டுப்படுத்தலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்