பப்பாளி, பருத்தி, கொய்யா மற்றும் பல விதமான பயிர்களை கபளீகரம் செய்யும் மாவுபூச்சி பற்றி ஏற்கனவே படித்தோம். தினமலரில், இந்த பூச்சியை இயற்கை முறையில் கட்டுபடுத்துவது பற்றி ஒரு செய்திவந்துள்ளது:
வேளாண்மை உதவி இயக்குனர் பாஸ்கரன் அவர்களின் செய்தி குறிப்பு:
வடமதுரை வட்டாரத்தில் பப்பாளியில் மாவுப்பூச்சி தாக்குதல் காணப்படுகிறது.
தாக்குதலின் அறிகுறிகள்
- கிளைகள், தண்டுகள்,பழங்கள் பகுதிகளில் வெள்ளையாக அடைபோல் படர்ந்திருக்கும்.
- சிவப்பு மற்றும் கருப்பு எறும்புகளின் நடமாட்டம் காணப்படும்.
- ஒட்டும் தன்மை கொண்ட தேன் போன்ற கழிவுகளும், அதன்மேல் கரும்பூசண வளர்ச்சியும் காணப்படும்.
கட்டுபடுத்தும் முறை
- களைகளை அகற்றி வயல்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
- இயற்கை எதிரிப்பூச்சிகளாக பொறி வண்டு ஏக்கருக்கு 500 வண்டுகளை தோட்டத்தில் விடவேண்டும்.
- வேப்பங்கொட்டை கரைசல் 5 சதவிகிதம் தெளிக்க வேண்டும்.
- பச்சை மிளகாய் 250 கிராம், இஞ்சி 250 கிராம், பூண்டு 250 கிராம் மூன்றையும் சேர்த்து அரைத்து இரண்டு லிட்டர் மாட்டு கோமியத்தில் ஊற வைத்து வடிகட்டி எடுத்து 300 மிலியை 10 லிட்டர் நீருடன் கலந்து இரண்டு அல்லது மூன்று முறை தெளிக்க வேண்டும்.
- ரசாயண மருந்தாகிய குளோர்பைரிபாஸ் 20 இசி மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீரில் ஐந்து மில்லி மருந்து கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்
நன்றி: தினமலர்
மாவுப்பூச்சி பற்றிய மற்ற இடவுகளை இங்கே பார்க்கலாம்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்