மாவு பூச்சி என்ற புதிய வில்லனை நாம் ஏற்கனவே படித்து உள்ளோம். 56 வகை பயிர்களை தாக்கும் பலே பூச்சியான மாவு பூச்சியால் விவசாயிகளுக்கு பெரிய நஷ்டங்கள் ஏற்பட்டுள்ளன.
வெளி நாட்டில் இருந்து வந்துள்ள இந்த பூச்சியை அடக்க இயறகையான எதிரிகள் இல்லாததே காரணம்.
இப்போது, விவசாய ஆராய்சியாளர்கள இந்த பூச்சியின் சொந்த ஊருக்கு சென்று மூன்று இயற்கை ஒட்டுண்ணிகளை கொண்டு வந்து உள்ளனர். இந்த பூச்சிகள் கட்டுப்படும் என்று நம்புவோம்.
இதோ அதை பற்றிய செய்தி:
பயிர்களைத் தாக்கும் பப்பாளி மாவுப்பூச்சியை உயிரியல் முறையில் கட்டுப்படுத்தும் 3 ஒட்டுண்ணிகளை தமிழக வேளாண் அமைச்சர் வீரபாண்டி சோ. ஆறுமுகம் கோவையில் வியாழக்கிழமை அறிமுகம் செய்தார்.
- பப்பாளி மாவுப்பூச்சி கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் பப்பாளி,மல்பெரி, மரவள்ளி, காட்டாமணக்கு,பருத்தி மற்றும் காய்கறிச் செடிகளை தாக்கி வருகிறது.
- தொடரும் வெப்பமான சூழல், குறைந்த மழையளவு காரணமாக மாவுப்பூச்சி தாக்குதல் அதிகரித்துள்ளது.
- கடந்த ஆண்டு (2009 -10 )கோவை,திருப்பூர், நாமக்கல்,ஈரோடு மாவட்டங்களில் மாவுப் பூச்சியானது 7,027 ஏக்கர் மரவள்ளியைப் பாதித்தது
- 56 வகை பயிர்களைத் தாக்கும் பப்பாளி மாவுப்பூச்சியை உயிரியல் முறையில் நிரந்தரமாகக் கட்டுப்படுத்த, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் 3 ஒட்டுண்ணிகளை அறிமுகம் செய்துள்ளது.
- அசிரோபேகஸ் பப்பாயி, சுடோப்போடோமாஸ்டிக் மெக்சிகானா, அனகைரஸ் லோக்கி ஆகியவை அந்த ஒட்டுண்ணிகள்.
- இவை, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்து,பெங்களூரில் உள்ள இந்திய தேசிய வேளாண் உயிரியல் ஆய்வு மையத்தால் இனப்பெருக்கம் செய்யப்பட்டவை.
- தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அந்த ஒட்டுண்ணிகளைப் பெற்று இனப்பெருக்கம் செய்து விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க உள்ளது.
- குளவி இனத்தை சேர்ந்த 100 ஒட்டுண்ணிகள் மூலம் 3 மாதங்களில் 5 லட்சம் ஒட்டுண்ணிகளை இனப்பெருக்கம் செய்யலாம்.
- வட்டாரந்தோறும் உள்ள வேளாண் அறிவியல் மையங்கள் மூலம் விவசாயிகளுக்கு இவை வழங்கப்படும்.
- இந்த ஒட்டுண்ணிகள் தானாகவே பரவும் என்பதால், ஒரு கிராமத்திற்கு 100 ஒட்டுண்ணிகள் போதுமானது.
- இந்த ஒட்டுண்ணிகள் மூலமாக தமிழகத்தில் மாவுப்பூச்சி விரைவில் முழுமையாக கட்டுப்படுத்தப்படும். இலங்கையில் இந்த ஒட்டுண்ணிகள் வெற்றிகரமாக செயலாற்றி உள்ளன என்றார்.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
One thought on “மாவுப் பூச்சியைக் கட்டுப்படுத்தும் ஒட்டுண்ணிகள் அறிமுகம்”