மாவு பூச்சியை பற்றியும், அதனை கட்டுபடுத்த ஒட்டுண்ணி அறிமுக படுத்த பட்டதை பற்றியும் முன்பே படித்தோம். இந்த ஒட்டுண்ணி எப்படி வேலை செய்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்
- மரவள்ளி, பப்பாளி, கொய்யா, கத்தரி, கோகோ, பழப்பயிர்கள், மலர்செடிகள், தேக்கு போன்ற பல்வேறு தோட்டக்கலை பயிர்களை பப்பாளி மாவுப்பூச்சி பெருமளவு தாக்கி சேதப்படுத்துகிறது.
- வெப்பம் அதிகரிக்கும்போது, மாவுப்பூச்சியால் சேதமும் அதிகரிக்கும்.
- பல்வேறு பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளித்தும், மாவுப்பூச்சியை முழுமையாக கட்டுப்படுத்த முடியாது.
- பப்பாளி மாவுப்பூச்சி குறுகிய வளர்ச்சி காலமும், பூச்சியின் அதிக இனப்பெருக்கத்திறனும், இப்பூச்சிகளின் மேல் பாதுகாப்பு கவசம் போல இருக்கும் வெண்மைநிற மாவு போன்ற பொருளும் இதற்கு காரணம்.
- இம்மாவுப்பூச்சியை உயிரியல் முறையில் நிரந்தரமாக கட்டுப்படுத்த அமெரிக்கா நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒட்டுண்ணி, “அசிரோபேகஸ் பப்பாயே’ தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் பவானிசாகர் ஆராய்ச்சி நிலையத்தில் உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
- சென்னிமலை வட்டாரத்தில் கடந்த பத்தாம் தேதி நான்கு விவசாயிகளின் மரவள்ளிப்பயிரில் ஒட்டுண்ணி வெளியிடப்பட்டது.
- இந்த ஒட்டுண்ணிகள் மாவுப்பூச்சி சேதமுள்ள வயல்வெளியில் வெளியிட்டவுடன், மாவுப்பூச்சிகளை சுறுசுறுப்பாக தேடிச்சென்று முட்டையிடும்.
- ஒரு பெண் ஒட்டுண்ணி 50 முதல் 60 முட்டைகளை இடும். இந்த முட்டைகளில் இருந்து வெளிவரும் ஒட்டுண்ணிகள் உடன் பப்பாளி மாவுப்பூச்சியை தாக்க துவங்கும்.
- ஒட்டுண்ணிகளின் வாழ்நாள் 16 முதல் 22 நாட்களில் முடிந்துவிடும்.வளர்ந்த ஒட்டுண்ணிகளின் ஆயுள் ஐந்து முதல் ஆறு நாட்களாகும்.
- மாவுப்பூச்சிகளின் சேதத்தை பொறுத்து, பாதிக்கப்பட்ட வயலில் 100 ஒட்டுண்ணிகள் விடப்படுகின்றன. குறுகிய கால இனப்பெருக்கம் ஏற்படுவதால், ஒரு வயலுக்கு ஒரு முறைவிட்டால் போதுமானதாகும்.
- ஒட்டுண்ணிகள் தானாக பெருகி பெருமளவில் மாவுப்பூச்சிகளை அழித்துவிடும்.
- ஒட்டுண்ணிகளால் பாதிக்கப்பட்ட மாவுப்பூச்சிகள் கருமை நிறமாக மாறி இறந்து இருப்பதை பார்க்க முடியும்.
- ஒட்டுண்ணி விடப்பட்ட 15 நாட்களில் ஒரு இலையில் ஆறு முதல் 32 ஒட்டுண்ணி வரை ஓடிக் கொண்டிருப்பதை பார்க்க முடியும்.
- இவை மற்ற நன்மை செய்யும் பூச்சிகளுக்கு கெடுதல் செய்வதில்லை.
- ஒட்டுண்ணிகள் விட்ட வயல்வெளியில் பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி மருந்துகள் தெளிக்கக்கூடாது
சென்னிமலை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தொடர்பிற்கு:
Agricultural Research Station
Bhavanisagar 638 451
Erode District, Tamil Nadu
தொலைபேசி எண்: 04295 240032 04295 240244
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்