மோனோகிராட்போஸ் பற்றிய உண்மைகள்..

மோனோகிராட்போஸ் போன்ற சக்தி வாய்ந்த ரசாயன பூச்சி கொல்லிகளை பற்றி ஏற்கனவே படித்து உள்ளோம்.

இவற்றை பற்றிய விஞான பூர்வமான ஆராய்ச்சியில் இருந்து சில விவரங்கள்:

Organophosphates எனப்படும் ரசாயன பூச்சி கொல்லிகள் இரண்டாம் உலக போரில் மனிதர்களை கொல்ல கண்டுபிடிக்கப்பட்ட நரம்பு காஸ் (Nerve Gas) என்ற ரசாயனத்தின் இருந்து பிள்ளையார் சுழி போடப்பட்டது

DDT போன்ற பூச்சி கொல்லிகள் போல் பல காலம் நீரிலும் நிலத்திலும் நிலைக்காமல் இருப்பதால் இவை அவற்றை விட சிறந்தவை என்று தப்பாக கணிக்கப்பட்டது

இப்போது பல நாடுகளில் இந்த குடும்பத்தை சேர்ந்த பல ரசாயன கொல்லிகள் தடை செய்ய பட்டு உள்ளன. இவை கருவில் இருக்கும் குழந்தைக்கும் வளரும் குழந்தைக்கும் அதிகம் தீமை செய்வது ஒத்து கொள்ளப்பட்டு உள்ளது

இந்திய மற்றும் வளரும் நாடுகளில் இவை அதிகம் பயன் படுத்த படுகின்றன. வருடத்திற்கு 200000 பேர் இந்த பூச்சிக்கொல்லிகளால் இறக்கின்றனர். இவற்றில் 99% வளரும் நாடுகளில். இவை அதிகம் உபயோகிக்க படும் நாடுகளை இங்கே பார்க்கலாம்…

இந்த ஆராய்ச்சி chlorpyrifos மற்றும் மோனோசரோட்போஸ் ரசாயன பூச்சி கொல்லிகளை உடனே தடை செய்ய வேண்டும் என்று கூறி உள்ளது

உலக அளவில் தடை செய்யபட்டுள்ள ரசாயன பூச்சி கொல்லிகளை இங்கே பார்க்கலாம்.அதிக நாடுகளில் தடை செய்யபட்டுள்ளது மோனோசரோடோபோஸ் மற்றும் மெத்தில் பாரதியான் மருந்துகள்

List of insecticides, their hazard levels, and number of countries banning them.

Table 1

 

மேலும் தெரிந்து கொள்ள – ப்ளஸ் மெடிசின்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *