மோனோக்ரோடோபோஸ் (Monocrotophos) என்ற ரசாயன பூச்சி கொல்லி பல நாடுகளில் தடை செய்ய பட்ட ஒரு ரசாயனம்.
இது அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், ஐரோப்பா, இந்தோனேசியா, ஜப்பான், இரான், ஜோர்டான், லிப்யா, நியூ சீலாந்து, தெற்கு ஆப்ரிகா, என்று பல நாடுகள் தடை செய்ய பட்டுள்ள இந்த பூச்சி கொல்லி இந்தியாவில் பூச்சிகளுக்கு எதிரான முதல் ஆயுதமாக பயன் படுகிறது (First line of defence) .
உலக சுகாதார நிறுவனம் இந்த பூச்சி கொள்ளியை முழுவதும் தடை செய்ய பரிந்துரை செய்து உள்ளது,
இந்த மருந்து பறவை இனங்களை ஒட்டுமொத்தமாக அழிப்பதால் அமெரிக்கா இதை தடை செய்தது
இந்த ரசாயனத்தால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு மூளையை பாதிக்கும் என்று படித்தோம்.
போன ஆண்டில் பீகாரில் தவறாக இந்த பூச்சி மருந்து கொண்ட கொள்கலன்களில் சமைக்கும் எண்ணையை வைத்து சமைத்ததில் சிறிய பள்ளி சிறார்கள் 23 பேர் மாண்டனர்
எளிதாகவும் மலிதாகவும் கிடைக்கும் இந்த பூச்சி மருந்து இன்னொரு என்டோசல்பான்.
இந்த மருந்தை முடிந்த வரை பயன் படுத்தாமல் இருப்பதே நலம்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
One thought on “மோனோக்ரோடோபோஸ் பயங்கரம்”