விவசாயிகள் பலர் நீர் வசதி உடைய இடங்களில் சிறிய அளவில் காய்கறி பயிர்கள், மலர் பயிர்கள் சாகுபடி செய்து வருகிறார்கள்.
வெப்ப நிலை, கடும் வறட்சியான சூழலில் அதிகம் இருந்தாலும், இத்தகைய பருவத்தில் வெகு வேகமாக தனது இனத்தைப் பெருக்கும் குணம் கொண்ட தீய பூச்சிகள் பல உள்ளன.
கண்ணுக்கு புலப்படாத சிறு பூச்சிகள் ‘மைட்ஸ்’ எனப்படும் சிலந்திகள் பயிர்களின் சாற்றை உறிஞ்சும் குணம் கொண்டவை. அசுவினி எனப்படும் தாய், குஞ்சுகளுடன் பயிரின் நுனிப்பகுதிகளில் அமர்ந்து கூட்டம், கூட்டமாக சாற்றை உறிஞ்சும் குணம் கொண்டவை.
இது மட்டுமல்ல, மாவுப்பூச்சி, வெள்ளை ஈ முதலிய பல பயிர்களை தாக்கும் தீய பூச்சிகள் பயிர்களின் விரோதியாக வறட்சியிலும் விவசாயிகளை வாழ விடாது.
கோடையில் எந்தப் பயிர் சாகுபடி செய்தாலும் ஊடு பயிராக வெங்காயம், புதினா, கொத்துமல்லியை விதைப்பது நலம் தரும்.
பயிர் இடைவெளியை முறையாக பேணி வரப்பு பயிர் முறையாகப் பேணி வரப்பு பயிர் அல்லது பொரிப்பயிர் எனப்படும் பொரியல் தட்டை, ஆமணக்கு முதலிய பயிர்களை சாகுபடி செய்வதும் குறிப்பாக நான்கு வரிசைக்கு ஒரு வரிசை என துவரை பயிருக்கு ஆமணக்கை ஊடுபயிராக சாகுபடி செய்வதும், மண் ஈரம் பராமரித்து உரிய பரிந்துரைக்கப்படும் உயிர் உரங்கள், மண் புழு உரம், நன்கு மட்கிய தொழு உரம் அடி உரமாக உபயோகித்தல் அவசியம்.
ஒவ்வொரு பயிரையும் என்னனென்ன பூச்சிகள் தாக்கும், என அறிந்து ஒருங்கிணைந்த பயிர் சாகுபடி செய்வது நலன் பயக்கும்.
தொடர்புக்கு 9842007125
– டாக்டர்.பா. இளங்கோவன்
வேளாண் துணை இயக்குனர், தேனி
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்