விவசாயிகள் தற்கொலை காரணங்கள் – II

மோனோக்ரோடோபோஸ் (Monochtorophos) என படும் ஒரு பூச்சி கொல்லி இந்தியாவில் அதிகமாக பயன் படுத்த படும் ஒரு பூச்சி கொல்லி. இது Organophosphates என படும் வகையை சார்ந்தது. விலை குறைவாக இது கிடைப்பதாலும் பல கம்பனிகள் உற்பத்தி செய்வதாலும் அதிகம் பயன் படுத்த படுகிறது

ஆனால் இந்த பூச்சி மருந்து அதிக சக்தி வாய்ந்தது. ஒரு தடவை பயன் படுத்தினாலும் மிக அதிக நாட்கள் நிலத்திலும் நீரிலும் அப்படியே இருக்கும் திறன் கொண்டது (persistant organic pollutant). இது செடிகளிலும் அவற்றை தின்னும் கால்நடைகள் மூலம் நாம் உண்ணும் பால் வரை தொடர்ந்து வரும்!

இந்த காரணங்களால் இந்த மருந்து அமெரிக்க, ஐரோப்பியன் யூனியன் இந்தோனேசியா ஆஸ்திரேலியா என்று பல நாடுகளில் தடை செய்ய பட்டு உள்ளது. ஏன் நம் அண்டை நாடான இலங்கை கூட தடை செய்து உள்ளது!

ஆனால் இந்திய, சீன போன்ற நாடுகளில் இவை தாராளமாக கிடைக்கிறது

இப்போது வெளி வந்துள்ள ஒரு ஆராய்ச்சி மூலம், இப்படிப்பட்ட Organophosphates பூச்சி மருந்து அதிக காலம் பயன் படுத்தும் விவசாயிகளுக்கு மூளை பாதிக்க படுகிறது. depression போன்ற மன நோய்கள் வருகின்றன. தற்கொலை எண்ணங்கள் அதிகம் வருகின்றன என்று ஆய்வு மூலம் தெரிந்து உள்ளது.

சீனாவில் நடந்த இந்த ஆய்வில் வீட்டில் இப்படி பட்ட மருந்துகளை வைத்து இருந்தாலே போறும் – அந்த வீட்டில் இருப்பவர்களுக்கு தற்கொலை எண்ணங்கள் வருகின்றன என்கிறது இந்த ஆய்வு!!

தமிழக விவசாயிகளே, மோனோக்ரோடோபோஸ் போன்ற மருந்துகளை பயன் படுத்துவதை குறையுங்கள். வீட்டில் வாங்கி வைக்காதீர்கள்!

மேலும் தகவல் அறிய:

1. Organophosphates
2. Persistent organic pollutants
3. Organophosphates Pesticides Exposure Linked To Suicidal Thoughts
4. மோனோக்ரோடோபோஸ் விபத்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

3 thoughts on “விவசாயிகள் தற்கொலை காரணங்கள் – II

  1. E.kumar says:

    Ethu unmaithan.enga village la kuda entha pesticide da spray panna farmer kuda ‘thalai suttral,vanthi,mayakkam pordra udal upathaikaluku utpattar…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *