குழித்தட்டு முறையில் மஞ்சள் நாற்று உற்பத்தி

மஞ்சள் சாகுபடி செய்து வரும் வடிவேல் குழித்தட்டு முறை விளக்குகிறார்.

 • தக்காளி, கத்திரி நாற்றுகளுக்கு பயன்படுத்தும் பிளாஸ்டிக் குழித்தட்டுகளை பயன்படுத்தலாம்.
 • 35 நாட்களில் நாற்றுகளை நடவு செய்யலாம்.
 • பொதுவாக ஏக்கருக்கு 1000 கிலோ விதை மஞ்சள் தேவைப்படும்.
 • குழித்தட்டு முறையில் ஏக்கருக்கு 170 கிலோ விதை மஞ்சள் போதுமானது.
 • அதன்படி விதை மஞ்சளுக்கு ரூ.3400 மற்றும் குழித்தட்டுக்கள், இயற்கை உரம் போன்ற செலவுகளுக்கு 6000 ரூபாய் வரை தான் செலவு.
 • ஆனால் நேரடி விதைப்பில் ரூ.20,000/- வரை செலவாகும்.
 • குழித்தட்டு நாற்றுகளை நிழல் வலை அமைத்துத்தான் உற்பத்தி செய்ய வேண்டும் என்பதில்லை. தோட்டத்தில் உள்ள மர நிழலிலும் வளர்க்கலாம்.
 • ஏக்கருக்கு சுமார் 32 ஆயிரம் நாற்றுகள் தேவைப்படும்.
 • ஒரு செடியில் இருந்து சுமார் 500 கிராம் வரை விளைச்சல் பெற்றுள்ளனர்.
 • அதன்படி ஏக்கருக்கு 45 குவிண்டால் விளைச்சல் கிடைக்கும். நேரடி நடவு முறையில் சுமார் 25 குவிண்டால் அளவுக்குத் தான் கிடைக்கும்.
 • தொடர்புக்கு – போன்: 09944033055

நன்றி: தினமலர் 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *