மஞ்சள் அறுவடைக்குப் பின் செய்ய வேண்டிய வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்து தர்மபுரி வேளாண் துணை இயக்குனர் (பொ) நாகராஜன் அறிவுரை வழங்கியுளார்.
- மஞ்சள் நல்ல வருவாய் தரக்கூடிய பணப்பயிராகும் என்பதால் மஞ்சள் அறுவடைக்குப் பின் வேளாண் தொழில் நுட்ப நேர்த்திகளை கடைபிடிக்க வேண்டும்.
- மஞ்சள் சுமார் ஒன்பது முதல் 10 மாதங்களில் அறுவடைக்கு வரும் பயிர்.
- இலைகள் மஞ்சள் நிறமாக மாறி, காய்ந்து விழும்போது பயிர் முதிர்ச்சியை தெரிந்து கொள்ளலாம்.
- மஞ்சள் பயிரின் தண்டை 10 நாட்களுக்கு முன்பாக தரையில் மேல் மட்டத்தில் 10 செ.மீ., விட்டு அறுக்க வேண்டும்.
- இதனால் மஞ்சளின் ஈரப்பதம் குறைவதுடன் விரைவில் முதிர்ச்சி அடையும்.
- மஞ்சள் கொத்து என்ற கருவியை பயன்படுத்தி மஞ்சளை கொத்தி எடுத்த பின் நேர்த்தியாக பதப்படுத்த வேண்டும்.
- ஈர மஞ்சளில் ஐந்தில் ஒரு பகுதி பதப்படுத்திய மஞ்சளாக கிடைக்கும்.
- பச்சையான மஞ்சளை சுத்தமான நீரில் வேக வைக்கும் போது மஞ்சள் வாசனை வைத்து மஞ்சள் வெந்து விட்டதை அறியலாம்.
- விரல் வைத்து மஞ்சளை அழித்தி வெந்து விட்டதை உறுதிப்படுத்த வேண்டும்.
- மஞ்சள் சரியாக வேகவில்லையென்றால் காயவைக்கும் போது சிறு சிறு துண்டுகளாக உடையும்.
- வேகவைத்த மஞ்சளை வெயிலில் ஏழு செ.மீ., உயரத்திற்கு பரப்பி 15 நாட்கள் வரை உலர விட வேண்டும்.
- விரலி மஞ்சள் இலகுவாக முறிய கூடாது. காயவைக்கப்பட்ட மஞ்சளில் சிறு, சிறு வேர்களும் செதில்களும் கலந்து இருந்தால் அதனை சுத்தப்படுத்த வேண்டும்.
- மஞ்சள் மெருகேற்றுவது மிகவும் அவசியம். மெருகேற்றும் கருவியைக் கொண்டு மஞ்சள் மெருகேற்ற வேண்டும்.
- மஞ்சளுக்கு நிறமேற்றுவது மிகவும் அவசியம். 100 கிலோ மஞ்சளை மெருகேற்ற படிகாரம் 40 கிராம், மஞ்சள் தூள் இரண்டு கிலோ, ஆமணக்கு எண்ணெய் 140 கிராம், சோடியம் பை சல்பேட் 30 கிராம் ஹைட்ரோ குளோரிக் அமிலம் 30 மில்லி சேர்த்து தயாரிக்கப்பட்ட கரைசலை கொண்டு நிறம் ஏற்றலாம்.
- மஞ்சள் கொடியுடன் ஆல்கஹால் சேர்த்து கரைசல் தயாரித்து மஞ்சளுக்கு நிறம் ஏற்றலாம்.
- மஞ்சளை தரம் பிரிப்பதன் மூலம் நல்ல லாபம் பெறலாம்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்