மஞ்சள் சாகுபடியில் ஏக்கருக்கு 30 டன் : ரூ.4.50 லட்சம் லாபம்

வறட்சியிலும் சொட்டுநீர் பாசனத்தை பயன்படுத்தி பயிர் செய்யப்பட்டுள்ள 7 அடி உயரம் வரை வளரும் ‘பிரதீபா மஞ்சள்‘ சாகுபடியில் ஈரோடு மாவட்டம் வேடச்சின்னானுார் விவசாயி வி.எம்.ஆர்.ராமமூர்த்தி சாதனை படைத்து வருகிறார்.

உலகின் மொத்த மஞ்சள் உற்பத்தியில்  60 சதவிகிதம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. நம்நாட்டு மண்ணில் விளையும் மஞ்சள் கிழங்கில் ‘குர்குமின்’ என்ற மருந்து பொருள் அதிகமாக இருப்பதால் தான் இந்திய மஞ்சளுக்கு வெளிநாடுகளில் ஏக கிராக்கி.

மஞ்சள் ஏற்றுமதி 60 சதவிகிதம் இந்தியாவில் இருந்து தான். இந்தியாவை அடுத்து பாகிஸ்தான், சீனா, ஜமக்கா, பெரு, தைவான், தாய்லாந்து நாடுகள் மஞ்சள் உற்பத்தியில் முன்னணியில் உள்ளன.

தமிழகத்தில் குறிப்பாக ஈரோடு, கோவை, சேலம், திருப்பூர் மாவட்டங்களில் விளைவிக்கப்படும் மஞ்சளில் தான் ‘குர்குமின்’ என்ற மருந்து பொருள் 6.5 சதவிகிதம் இருப்பதால் வியாபாரிகள் விரும்பி மஞ்சளை வாங்குகின்றனர். 2016 ஆண்டில் மட்டும் நான்கு மாவட்டங்களில் 80 சதவிகிதம் ஏக்கரில் மஞ்சள் சாகுபடி நடந்துள்ளது.

Courtesy: Dinamalar
Courtesy: Dinamalar

சொட்டு நீர் பாசன முறையில் பிரதீபா மஞ்சள் ரக உற்பத்தி குறித்து மஞ்சள் விவசாயி ராமமூர்த்தி கூறியதாவது:

  • பத்து ஏக்கரில் பிரதீபா மஞ்சள் பயிரிட்டு உள்ளேன்.
    சொட்டு நீர் பாசன முறையில் சாகுபடி செய்து வரு கிறேன். அவை தற்போது சுமார் 7 அடி உயரம் வரை வளர்ந்துள்ளது.
  • தாய்லாந்து நாட்டை சேர்ந்த முன்னோடி மஞ்சள் விவசாயி ஷனான், சென்னையை சேர்ந்த மோகன் ஆகியோர் எனது தோட்டத்தை நேரில் பார்வையிட்டு சொட்டு நீர் பாசன முறை குறித்து ஆய்வு செய்தனர்.
  • மஞ்சள் நடுவது முதல் அறுவடை வரை அனைத்து தொழில்நுட்பங்களையும், தண்ணீர் பாய்ச்சும் முறை, களை எடுப்பதும், பூச்சி மருந்து அடிப்பது, மஞ்சள் கிழங்கை தோண்டி எடுப்பது, வேகவைப்பது குறித்து களப்பயிற்சி எடுத்து கொண்டனர்.
  • தாய்லாந்து நாட்டில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் 25 அடி தோண்டினாலே தண்ணீர் கிடைத்து விடும். மண்வளம், மழை வளம், மனித வளம், நீர் வளம் இருந்தும் ஏக்கருக்கு 10 டன் அளவு கூட தாய்லாந்தில் மஞ்சள் சாகுபடி நடக்கவில்லை.
  • எனது வயலில் ஏக்கருக்கு 30 டன் மகசூல் கிடைக்கிறது. குறைந்த பட்ச விலையாக கிலோ 15 ரூபாய் என வைத்து கொண்டாலும் ஏக்கருக்கு நான்கு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஆண்டுக்கு லாபம் கிடைக்கிறது.
  • ஈரோட்டில் ஆயிரம் அடிக்கு மேல் ஆழ்துளை கிணறு அமைத்தால் தான் கொஞ்சம் தண்ணீர் வரும். குறைந்தளவு தண்ணீரில் மஞ்சள் சாகுபடி என்பது இயலாது.
  • எனவே சொட்டு நீர் பாசன முறையில் செடிகளுக்கு நீர் பாய்ச்சுகிறேன். தாய்லாந்தை ஒப்பிடும்போது ஈரோட்டில் 40 டன் அளவு மஞ்சள் உற்பத்தி நடக்கிறது என்றார்.

தொடர்புக்கு 09442352121 .
– கா.சுப்பிரமணியன்,
மதுரை.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *