மணிலா சாகுபடி உத்திகள்

இறவை மணிலா பயிரில் கூடுதல் மகசூல் பெறுவதற்கு ஊட்டச்சத்து கரைசல் தெளிக்கும் முறையை வேளாண் பல்கலைக்கழகம் தற்போது தீவிரமாக வலியுறுத்தி வருகிறது.

கார்த்திகை பட்டத்தில் மானாவாரியில் 2.57 லட்சம் ஹெக்டேரிலும் இறவை பாசனத்தில் 1.56 லட்சம் ஹெக்டேரிலும் மணிலா பயிரிடப்பட்டு உள்ளது.

மார்ச் மாதத்தில் மணிலா அறுவடைக்கு வரும்.  தற்போது உள்ள இறவை மணிலா பயிருக்கு ஊட்டச்சத்து கரைசல் தெளிப்பதன் மூலம் மகசூலை அதிகரிக்க முடியும், மணிலா பருப்பு திரட்சியாக உருவாகி விதைத் தரம் அதிகரிக்கும் என்றும் வேளாண் விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.

ஊட்டச்சத்து கரைசல் தெளித்தல் குறித்து கடலூர் வேளாண் இணை இயக்குநர் எம்.ராதாகிருஷ்ணன் கூறியது:

  • இறவை மணிலா பயிரில் கூடுதல் மகசூல் பெறவும் திரட்சியான பருப்பைப் பெறவும் இலைவழியாக ஊட்டச்சத்தை பெறுவதற்கு ஊட்டச்சத்து கரைசல் தெளிப்பு அவசியமாகிறது.
  • ஒரு ஏக்கர் மணிலாவுக்கு ஊட்டச்சத்து கரைசல் தயாரிப்புக்கு, டி.ஏ.பி. உரம் ஒரு கிலோ, அம்மோனியம் சல்பேட் 400 கிராம், போரக்ஸ் (வெண்காரம்) 200 கிராம் ஆகியவற்றை 15 லிட்டர் தண்ணீரில் ஒன்றாகக் கலந்து, ஒரு இரவு முழுவதும் வைத்து இருக்க வேண்டும்.
  • மறுநாள் காலையில் இக்கலவையை வடிகட்டினால், 13 லிட்டர் வரை தெளிந்த ஊட்டச்சத்து கரைசல் நீர் கிடைக்கும்.
  • இதை 187 லிட்டர் தண்ணீருடன் சேர்த்து, 200 லிட்டர் என்ற அளவில், கரைசலைத் தயார் செய்ய வேண்டும்.
  • தேவைப்பட்டால் பிளானோபிக்ஸ் 140 மில்லி சேர்த்து, விதைத்து 25 நாள்களில் ஒருமுறையும், 10 நாள் இடைவெளியிட்டு 35-ம் நாள் ஒரு முறையும் மணிலா செடிகளில் தெளிக்க வேண்டும்.
  • எனவே இறவை மணிலா சாகுபடி செய்துள்ள விவசாயிகள், கூடுதல் மகசூலும் கூடுதல் விலையும் கிடைத்திட ஊட்டச்சத்து கரைசல் தெளித்துப் பயன் அடையுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
  • தேசிய வேளாண் அபிவிருத்திóத் திட்டத்தில், மணிலா ஊட்டச்சத்து கலவை பைகள் 50 சதவீதம் மானிய விலையில் வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம், விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
  • இறவை மணிலாவுக்கு வளர்ச்சிப் பருவத்தில் சரியான தருணத்தில் ஜிப்சம் இடுவதால் பொக்கு இல்லாமல் மணிலா திரட்சியான பருப்பு உண்டாகவும் காய் பிடிப்புத் திறனும் அதிகரிக்கும்.
  • ஒரு ஏக்கருக்கு 160 கிலோ ஜிப்சம் இட வேண்டும். இதில் 80 கிலோவை அடியுரமாக இடவேண்டும்.
  • பயிர் வளர்ச்சிப் பருவத்தில் விதைப்பு செய்த 40 முதல் 45 நாள்களில், 2-வது களை எடுக்கும் தருணத்தில் 80 கிலோ ஜிப்சம் இட்டு செடிகளை சுற்றி நன்றாகக் கொத்திவிட்டு, மண் அணைக்க வேண்டும் என்றார் இணை இயக்குநர்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *