மண் மற்றும் நீரை பரிசோதிக்க..

பெரியகுளம் தாலுகா விவசாயிகள் மண் மற்றும் கிணற்று நீரை பரிசோதனை செய்து மகசூலை அதிகப்படுத்த வேளாண்மைத்துறை ஆலோசனை வழங்கியுள்ளது. பெரியகுளம் வேளாண்மைத்துறை உதவி இயக்குனர் பெரியகருப்பன் கூறியதாவது:

  • பயிரின் தேவைக்கேற்ப உரமிடுவதற்கும், பயிர்களின் வளர்ச்சிக்கும் மண் உகந்ததா என்பதனை அறிந்து கொள்வதற்கு மண் மற்றும் பாசனநீரை பரிசோதனை செய்வது அவசியமானதாகும்.
  • விவசாயிகள் பயிரின் தேவைக்கேற்ப உரமிடும்பொழுது குறைந்த சாகுபடி செலவில் அதிகளவில் மகசூல் பெற்றிடலாம்.
  • மண்ணில் உள்ள தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்துக்களின் அளவினை கணக்கிட்டு ஓரே சீராக உரமிடலாம்.
  • சிக்கனமான முறைகளில் உரங்களை பயிர்களுக்கு இட்டு உரச்செலவினை குறைந்திடலாம்.
  • மண் மாதிரியில் விவசாயிகளின் பெயர், கிரமாம் சர்வே எண், பாசனவசதி, பயிரிடப்பட்ட முன் பயிர், அடுத்து பயிரிடப்போகும் பயிர் ஆகிய விபரங்களை அனுப்பவேண்டும்.
  • ஒரு மண் மாதிரிக்கு ரூ. 5 செலுத்தி மண் ஆய்வுக்கூடம், மண் பரிசோதனை செய்து கொள்ளலாம்.
  • பாசனநீரையும் சுத்தமான பாட்டிலில் 500 மி.லி.,யை ரூ.10 செலுத்தி ஆய்வு செய்து கொள்ளலாம், இதன் மூலம் விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும், என்றார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *