மண் வளத்தை காப்பது அவசியம்!

விவசாயத்திற்கு தகுதி யற்ற நிலத்தையும், தகுதி யுள்ளதாக மாற்றலாம் என்கிறார் தமிழ்நாடு மண் மற்றும் நீர் ஆராய்ச்சி நிலைய மண்ணியல் துறை வல்லுனர் பாபு:

  • ஒரு மண்ணில் கார, அமிலத்தன்மை, உப்புத்தன்மை போன்றவை, சரியான அளவில் இருப்பதோடு, ஊட்டச் சத்தும் மண்ணுக்கு அத்தியாவசியமானது.
  • உயர் விளைச்சல் ரகங்கள் மற்றும் அதிகள வில் ரசாயன உரங்களை பயன்படுத்து வதால், மண்ணிலுள்ள நுண்ணுயிர்கள் அழிந்து, மண் வளம் பாதிக்கப்படுகிறது. மண் வளத்தை அதிகரிக்க, வயலில் அதிக அளவு இயற்கை இடு பொருள்களை இடுவதோடு, மண் புழுக்கள் அதிகமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • மேலும், வயலில் கிடைக்கக்கூடிய இலை, தழைகளை வெட்டிப் போட்டால், மண்ணில் மக்கி அது உரமாக மாறும். பசுந்தாள் பயிர்களை விதைத்தால், அது மண்ணின் கட்டமைப்பையும், தன்மையையும் பாதுகாக்கும்.
  • அசோலா, பாஸ்போ, பாக்டீரியா போன்ற நுண்ணுயிர் உரங்களைத் தெளித்தால், அவை பயிர்களுக்கும், மண்ணுக்கும் நிறைய நன்மைகளை செய்கின்றன.
  • களர் நிலம் மற்றும் உவர் நிலம் அல்லது களர் உவர் நிலங்கள், பயிர் சாகுபடி செய்ய தகுதியில்லாத நிலங்களாக கருதப்படுகின்றன. களர் நிலமாக இருந்து, அதில் சோடியம் உப்பு அதிகமாக இருந்தால், பாதிக்கப்பட்ட நிலத்தை நன்கு உழுது, அதில் இருக்கும் சோடியம் உப்புக்குத் தகுந்த அளவு ஜிப்சத்தை கொட்டி, 48 மணி நேரம் ஊற வைத்து, அங்குள்ள நீரை வெளியேற்ற வேண்டும்.
  • இவ்வாறு, ஒரு முறை வெளியேற்றியவுடன், ஏதாவது ஒரு பயிர் செய்து, அதிக அளவில் இயற்கை உரங்களையும், தழைச்சத்தையும் இட வேண்டும். பின், அடுத்த முறையும் ஜிப்சத்தைக் கொட்டி, மேற்கூறிய முறையை செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்யும் போது, மண்ணின் உப்புத்தன்மை மாறிவிடும்.
  • அதேபோல், அனைத்து உப்புகளும் அதிகம் உள்ள உவர் மண்ணின் மேற்பகுதி யில், வெள்ளை வெள்ளை யாக உப்புக்கள் படிந்திருக்கும். இந்த மண், எல்லா பயிர்களையும் எரித்துவிடும் தன்மை உடையது. எனவே, வேறு ஏதாவது பகுதி யில் நாற்றுவிட்டு, நன்கு முற்றிய நாற்றை இதில் நடவு செய்யலாம். உவர் மண்ணில் எல்லா உப்புக்களும் அதிகம் உள்ளதால், அதை தனித்தனியாகப் பிரித்து, வெளியில் எடுக்க வேண்டும். இதுவும் சாத்தியமாகக் கூடிய முறை தான். இருந்தும், இந்த மண்ணை சரி செய்ய, கொஞ்சம் செலவு ஆகும்.
  • மேலும், ஒரே பயிரை தொடர்ந்து செய்யாமல், பயிர்களை மாற்றி செய்யும் போது, மகசூலும் அதிகமாகக் கிடைக்கும்; மண்ணின் வளமும் அதிகமாக இருக்கும். அதேபோல், வயலை கொஞ்ச நாள் தரிசாகப் போட்டு வைக்கும் போது, மண்ணில் நுண்ணுயிர்கள் அதிகமாகும்; நல்ல காற்றோட்டமும் கிடைக்கும். இதனால், அடுத்தடுத்த பருவங்களில் கூடுதல் மகசூல் பெறுவதோடு, மண்வளத்தையும் காக்கலாம். தொடர்புக்கு: 09442344461

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *