விலாவேர், இலமிச்சம் வேர் என்ற பெயர்களால் குறிப்பிடப்படும் வெட்டிவேர் எல்லா விவசாயிகளுக்கும் நன்மை செய்யும் ஒரு வெற்றி வேராகத் திகழ்கிறது.
- பிரதானமாக இந்த வேர் மண் அரிப்பைத் தடுப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது.
- வெட்டிவேரின் செடிகளை வேருடன் வெட்டி, தோண்டி எடுத்து, ஒரு கொத்தாக உள்ள செடியைத் தனித்தனியே பிரித்தெடுக்க வேண்டும்.
- பின் வேர்ப்பகுதியிலிருந்து 15-20 செ.மீ. மேலே உள்ள இலைகளை வெட்டிவிட வேண்டும்.
- வேர்ப்பகுதியிலிருந்து 10 செ.மீ. கீழே உள்ள வேர்களை வெட்டி, நடுவதற்கு உள்ள நாற்றுக்களைத் தயாரிக்க வேண்டும். இதனை 15 செ.மீ. இடைவெளியில் நடுதல் அவசியமாகும்.
- வெட்டிவேர் புல்லை வெட்டி தாவரங்களைச் சுற்றிலும் போடுவதால் வறட்சியிலிருந்து அவற்றைக் காக்கலாம்.
- மேலும் பூச்சிகள், எலிகள், பாம்புகள் ஆகியவற்றை இதன் இலைகளும் வேர்களும் விரட்டிவிடுகின்றன.
- நெல்வயல்களில் வெட்டிவேரை நடலாம். இதனால் வயலில் அமைக்கப் பட்ட கரைகள் உறுதிப்படும்.
- ஏலத் தோட்டப் பகுதிகளில் வெட்டிவேரைப் பயன்படுத்தினால், நிலச்சரிவு ஏற்படாது. இடுகரை விழாது.
- வெட்டிவேர் நட்டதும், அந்தப்பூமி உறுதிப்பட்டுவிடும். கல்சுவர்களின் ஊடே இது செழிப்பாக வளர்ந்துசெல்லும்.
- இதன் வேரில் உள்ள எண்ணெய்த்தன்மை எலிகளை அண்டவிடாது.
- இது பயிரையோ, அதன் விளைச்சலையோ எவ்விதத்திலும் பாதிக் காது.
- ஒவ்வொரு ஆண்டும் வெட்டிவேரைத் தரைமட்ட அளவிற்கு வெட்டிவிட்டு, உரிய பயிருக்கு வெட்டிவேர் கூடுதல் நிழல் தராமல் தடுக்கலாம்.
- இதன் உறுதியான சிம்பு வேர்கள் பூமிக்குள் 3 மீட்டர் ஆழம் வரை அடர்ந்து படர்ந்து, மண் சரிவு, உடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கின்றது.
- மற்ற விவசாயப் பயிர்களின் இயல்பான வளர்ச்சியில் இது போட்டியிடுவதில்லை.அவற்றின் வளர்ச்சியில் பெரிதும் துணைபுரிகின்றது.
- இத்தகயை வெட்டிவேர் எல்லா வகையான மண்ணிலும் பல வகையான கால நிலையிலும் வளமுடன் வளரும்.
- இதனைச் சுற்றியுள்ள மற்ற பயிர்கள் ஒரு வேளை அழிய நேர்ந்தாலும் வெட்டிவேர் அழிவதில்லை.
- அடுத்துவரும் மழையிலிருந்து மண்ணைக் காக்க, மண்ணிற்குள் மறைந்திருக்கும்.
(தகவல்: ஸ்பைசஸ் இந்தியா, கொச்சி. மூலம்: எஸ்.பழனிச்சாமி)
-எஸ்.நாகரத்தினம், விருதுநகர்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
வணக்கம் சார்,
வெட்டி வேர் எங்கு கிடைக்கும் சார். அதன் விவரம் தேவை.
V ETRIVER CULTIVATION TECHNIQUES AND MARKETABILITY OPPORTUNITIES INFORMATION WILL BE MORE THANKFULLY RECEIVED.