ஆக்ஸிஜன் அதிகம் கொடுக்கும் புங்க மரம்

புங்க மரம் (Millettia pinnata) எளிதாக சாலையோரங்களில் நடலாம். நல்ல நிழல், குளிர்ச்சி கிடைக்கும். 5 வருடங்களில் நன்றாக வளர்ந்து நிழல் கொடுக்கும். பராமரிப்பு குறைவே. இதன் மற்ற பயன்களை பார்க்கலாமா?

  • புங்க மரம் இந்தியாவை தாயகமாகக் கொண்டது.
  • ஆக்ஸிஜனை அதிகளவு உற்பத்தி செய்யும் மரங்களுள் புங்க மரமும் ஒன்று.
  • சாலை ஓரங்களில் நிழல் தரும் மரங்களாக வளர்க்கப்படுகிறது.
  • மண் அரிப்பைத் தடுக்கவும் புங்கன் மரங்கள் வளர்க்கப்படுகின்றன.
  •  புவி வெப்பமயமாதலை தடுக்கும் தன்மையுள்ள மரங்களில் புங்க மரமும் ஒன்று.
  • வெப்பத்தின் தன்மையை உறிஞ்சி சீரான வெப்ப நிலையை ஏற்படுத்தும் குணம் இதற்கு உண்டு.
  • புங்க மர விதைகளிலிருந்து 30 – 40 சதவீத எண்ணெய்ச் சத்து உள்ளதாக கண்டறியப்பட்டு உள்ளது.

  • புங்க மரத்தில் இலை, பு , விதைகள், வேர் என அனைத்தும் பயன்தரக் கூடிய பாகங்கள் ஆகும்.
  • புங்க மரம் சுமார் 18 மீ உயரம் வரை வளரும். சமவெளிகளிலும் 3000 அடி உயரமான இடங்கள் வரையிலும் வளரும்.
  • புங்க மர இலைகள் கூட்டிலைகளையும், முட்டை வடிவச் சிற்றிலைகளையும் கொண்டு இருக்கும்.
  • புங்க மர காய்கள் பச்சையாக தட்டையாக இருக்கும். நன்றாக முற்றியவுடன் லேசான மஞ்சள் நிறமுடைய காய்களின் முனை வளைந்து காணப்படும்.
  • புங்க மர பு க்கள் இளஞ்சிவப்பும் வெண்மையும் கலந்த நெற்பொறி போன்று கொத்துக் கொத்தாக இருக்கும்.
  • கிராமங்களில் வீட்டின் முன்பு வேம்பு அல்லது புங்கன்மரம் இருப்பதை பார்க்கலாம். இவைகள் வெளியிலிருந்து வரக்கூடிய கிருமிகளையும், தூசிகளையும் வடிகட்டி நமக்கு சுத்தமான காற்றை அனுப்புகின்றன.
  • புங்க இலையை நீரில் போட்டுக் கொதிக்க வைத்து அதை குளித்து வந்தால் வாத நோய்கள் குணமாகும்.
  • புங்க பு வை தேவையான அளவு எடுத்துக் கொண்டு சிறிது நெய் விட்டு வறுத்து இடித்துப் பொடிசெய்து சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மேக நோய்கள் குணமாகும்.
  • புங்க பு வை கசாயமிட்டு அருந்தி வந்தால், நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் அதிக தாகத்திற்கு ஒரு தீர்வாக இருக்கும்.
  • புங்க விதைப் பொடியை தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் தேள் கடி விஷம் முறியும்.
  • புங்க இலையில் கிடைக்கும் பாலை புண்களுக்குப் போட்டு வந்தால் விரைவில் அவை ஆறும்.
  • புங்க வேர்ப் பட்டையைப் பொடி செய்து 5 மூன்று வேளை உட்கொண்டு வந்தால் இருமல் குணமாகும்.

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *