100 வருடம் முன் யாரோ, எங்கள் மெயின் ரோட்டில் அரசமரத்தையும் ஒரு வெப்ப மரத்தையும் பக்கத்தில் நாட்டார். அடுத்த தலைமுறை அந்த மரங்களை வெட்டி விடுவார்களோ என்று பயந்து, இரண்டு மரங்கள் நடுவே ஒரு சின்ன பிள்ளையார் கோயிலை கட்டி வைத்தார்.
இப்போது, சம்பந்தமே இல்லாத நான், இந்த மரங்கள் வளர்ந்து அழகாக சாலையில் நிழல் கொடுப்பதை பார்க்கிறேன்.
மார்ச் மாதம், அரச மர இலைகள் விழுந்து, புதிய இலைகள் இளம் சிவப்பு நிறத்தில் வருவது பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது!
அடுத்த தலைமுறைக்கும் அதற்கு பின் வரும் தலைமுறைகளுக்கும் நாம் விட்டு போவது என்ன??
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்