மரங்களை நடுவது எப்படி?

மனிதர்கள் மரங்கள், செடி கொடி மூலமாகத் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதாவது அவற்றின் மூலமாகத்தான் தேவையான ஆக்சிஜனை பெறுகின்றனர்.ஆக்சிஜனைத் தேவையான அளவு பெற்றுக்கொண்டு ஆரோக்கிய வாழ்வு வாழ மனிதனைச் சுற்றி நலம் பயக்கும் மரங்கள் அவசியமாகும். அவை பணம் தரும் மரங்களாகவும் இருந்தால் இன்னும் கூடுதல் பயனுள்ளதாக இருக்கும். சிறிய இடத்தில், அதாவது பத்துக்குப் பத்து அடியில்கூட மரங்களை வளர்க்க முடியும்.

  •  வீட்டிற்கு குளிர்ச்சியையும், அழகையும் தரவல்ல மரங்களை நிழல், பயன் மற்றும் பணம் தரும் மரங்கள் என மூன்று வகைகளாகப் பிரித்துக் கொள்ளலாம்.
  • இதில் வேப்ப மரம், புங்கை மரம், சரக்கொன்றை, பு வரசு, செர்க்கோலியா, மந்தாரை, மரமல்லி, நாகலிங்கம் மற்றும் வில்வம் ஆகியவை நிழல் தரும் மரங்கள் ஆகும்.
  • மா, பலா, வாழை, தென்னை, கொய்யா, சப்போட்டா, மாதுளை, எலுமிச்சை, சீதாப்பழம், அரை நெல்லி, முழு நெல்லி, பப்பாளி ஆகியவை பயன் தரும் மரங்கள்.
  • தேக்கு, சந்தனம், சிவப்பு சந்தனம், மகாகனி, இறக்குமதி சவுக்கு, பில்லா ஓக் ஆகியவை பணம் தரும் மரங்கள்.
  • கோடைக்காலம்தான் மரங்கள் நடுவதற்கு தகுந்த காலம்.
  • மரக்கன்றுகள் நடும்போது குறைந்தபட்சம் 4 அடி உயரம் இருக்க வேண்டும். அத்தகைய மரக்கன்றுகள்தான் பக்குவப்பட்ட மரக்கன்றுகள் எனப்படுகின்றன.
  • 2×2 அடி என்ற சதுரமும், 2 அடி ஆழமும் உள்ள குழியை எடுத்து, ஒரு பங்கு மணலை முதலில் கொட்ட வேண்டும்.
  • அதற்கு மேல் எரு 2 பங்கு, செம்மண் 3 பங்கு இட்டு, ஒரு கைப்பிடி அளவு வேப்பம் புண்ணாக்கு போட வேண்டும்.
  • தயார் செய்யப்பட்டக் குழியை ஆறு மணி நேரம் அப்படியே காலியாக விட்டுவிட வேண்டும். இதனால் குழியில் உள்ள வெப்பம் வெளியேறி செடி பசுமையாக இருக்க உதவும்.
  • இவ்வாறு தயாரான குழியில் மரக்கன்றுகளை காலை அல்லது மாலை வேளையில் தான் நட வேண்டும். வழக்கம் போல் மரக்கன்று நட்டவுடன் தண்ணீர் ஊற்ற வேண்டும்.
  • நிழல் தரும் மரங்களுக்குப் பராமரிப்பு செலவு கிடையாது. பழம் தரும் மரங்களுக்குப் பராமரிப்பு தேவைப்படும்.
  • இவை இரண்டு மூன்று ஆண்டுகளில் பயனளிக்கத் தொடங்கிவிடும்.
  • ஆனால் பணம் தரும் மரங்கள் பலனளிக்கக் குறைந்தபட்சம் பத்தாண்டுகள் ஆகும். இந்த மரங்கள் எவ்வளவு உயரமாக வளருகிறதோ அவ்வளவு பயனை பணமாகத் தரும்.
  • இந்த மரங்களின் கிளைகளை வெட்டிவிட்டு நேராக வளருமாறு செய்தால் தண்டு தடித்து தரம் உயர்ந்ததாக அமையும்.

மரங்களை பற்றிய சில தகவல்கள்..

மேலும் மரங்களை பற்றிய பல தகவல்கள் இங்கே..


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *