மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் எப்படி ஆராய்ச்சி மூலம் செய்கிறார்கள் என்று முன்பு படித்து உள்ளோம். சுருக்கமாக சொல்ல போனால் ஒரு பூச்சிக்கு விஷமாக இருக்கும் ஒரு மரபணு நமக்கு உணவாக்கும் பயிரின் மரபணுவுடன் சேர்க்க படுகிறது.
உதாரணமாக BT பருத்தியில் மண்ணில் உள்ள ஒரு பக்டீரியா வின் DNA எடுத்து பருத்தியன் DNA வுடன் சேர்க்க படுகிறது. இந்த பருத்தியை தாக்கும் பூச்சிகளுக்கு இது விஷம்.
இந்த தொழிர்நுட்பதை பயன் படுத்தி மொன்சாண்டோ அமெரிக்காவில் பல வித மரபணு மாற்றப்பட்ட விதைகளை சந்தையில் கொண்டு வந்து உள்ளது
அப்படி பட்ட -ஒன்று மரபணு மாற்றபட்ட Yieldguard என்ற சோளம். சோளத்தை தாக்கும் Corn rootworms என்ற பூச்சிகளுக்கு Cry3Bb1 என்ற விஷம் இருக்கிறது.
ஆனால் இயற்கை பற்றி நம்முடைய விஞானிகள் தப்பு கணக்கு போடுகின்றனர். இயற்கை பரிமாண வளர்ச்சி (Evolution) எப்போதும் நடந்து கொண்டே இருக்கிறது.
ஐந்தே ஆண்டுகளில் இந்த corn rootworm பூச்சிகள் Cry3Bb1 விஷத்திற்கு எதிர்த்தெறிதல் “கற்று” கொண்டு விட்டன (resilent)
இதே கதியை BT பருத்தியிலும் பார்த்தோம்… இதற்கு மரபணு மாற்றப்பட்ட விதை நிறுவனங்கள் என்ன கூறுகின்றன?
“Cry3Bb1 விஷத்தை விட அதிக திறன் கொண்ட புது சோளம் ஆராய்ச்சியில் கண்டு பிடிப்போம்.”
ஆனால், இயற்கையின் பரிணாம வளர்ச்சி திறனையும், சக்தியையும் குறைவாக மதிப்பிடு செய்யலாமா?
மேலும் மேலும் விஷத்தன்மை கொண்ட விதைகளை உருவாக்கி விஷ பரீட்சை செய்ய வேண்டுமா?
நன்றி: New Scientist
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்